புதன், 4 மே, 2016

சென்னை ட்ரவல்ஸ் அதிபர் சுட்டு கொலை.. சவுகார்பேட்டை சிவசக்தி ட்ரவல்ஸ்

A 50-year-old man from Rajasthan, who ran a travel agency in Sowcarpet, was shot dead by unknown persons on Tuesday evening. Police claim to have recovered a few empty cartridges from the spot.
சென்னை சவுகார்பேட்டை பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுசிங் (50) என்பவர் சிவசக்தி டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம், ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் சேவையை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாபுசிங் நேற்று மாலை தனது டிராவல்ஸ் அலுவலகத்தில் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாபுசிங்கின் தலையில் பின்பக்கம் பலத்த காயம் இருந்தது. பாபுசிங் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாபுசிங்கை துப்பாக்கியால் சுட்டது யார்? எதற்காக? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாபுசிங்கை மர்மநபர் துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகி உள்ளது.
கொலையாளியின் உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொலையாளியை பிடிக்க காவல் துறையினர் தீவிர முயற்சு மேற்கொண்டுள்ளனர். கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பாபுசிங்கிற்கும், கொலையாளிக்கும் வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. இறுதியில், வாக்குவாதம் முற்றியதை அடுத்து அந்த நபர் சுட்டிருக்கிலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாகவும் பாபுசிங் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் கருதிகின்றனர்  webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக