ஞாயிறு, 22 மே, 2016

570 கோடி.. தேசம் முழுதும் அதிர்ச்சி ! சிக்கியது கருப்பு/லஞ்ச பணம்தான்...தேவசகாயம் EX ஐ ஏ எஸ்

தேசம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள திருப்பூர் கண்டெய்னர்கள்  விவகாரத்தை, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முதன் முதலில் தெரிவித்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசகாயம். அவரை நேரில் சந்தித்தோம். <>நம்மிடம் பேசிய அவர், ""திருப்பூரில் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்த தேர்தல் அதிகாரி, 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடியை மடக்கிப்பிடித்துள்ளார் என்கிற ஒரு தகவல், 14-ந்தேதி காலையில் எனக்கு கிடைத்தது. இதனையடுத்து,  அந்த பணம் எங்களுடையதுதான் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா சொந்தம் கொண்டாடுவதாகவும் ஆனால், அதற்கான முறையான ஆவணங்கள் காட்டவில்லை என்றும் ஒரு தகவல் கிடைத்தது. இந்த தகவல்களில் உண்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. உடனே, எனது நண்பரான  ஸ்டேட் பேங்கின் ஓய்வுபெற்ற  ஜெனரல் மேனேஜரிடம் இதை தெரிவித்தபோது, "ஸ்டேட் பேங்க்கின் பணமாக இருக்க வாய்ப் பில்லை. ரிசர்வ் வங்கி பணமாக இருக்கலாம். ஆனால், 1 லட்ச ரூபாய் எடுத்துச்செல்வதாக இருந்தால் கூட அதற்குப் பல ப்ரோட்டகால் இருக்கிறது.

570 கோடி என்பது மிகப்பெரிய தொகை. அதனை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு எடுத்துச்செல்வதாக இருப்பின் ஏகப்பட்ட நடைமுறைகள் உண்டு. தவிர, பொதுவாக ரிசர்வ் வங்கி அதிகபட்சமாகவே 20 கோடிதான் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணும். அதனால் 570 கோடி பிடிபட்டிருப்பதில் வில்லங்கங்கள் இருக்கலாம்' என சொன்னார்.t;இதனைத் தொடர்ந்து, சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நண்பர் ஒருவரை தொடர்புகொண்டு 570 கோடியை விவாதித்தபோது, "வங்கிகளின் பண பரிவர்த்தனைகளில் ப்ளான் "ஏ' மற்றும் ப்ளான் "பி' என 2 வகை கோட் வேர்ட் உண்டு. ப்ளான் "ஏ' என்பது, குறிப்பிட்ட அளவிலான பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் போது எவ்வித சிக்கலும் இல்லாமல் போய்ச்சேர்ந்துவிடுவதை குறிக்கும். போய்ச் சேரவேண்டிய அந்த பணம் போய்ச் சேராமல் இடையிலேயே சிக்கல்கள் ஏற்பட்டு பிடிபட்டால் அதற்கு பிளான் "பி' என்று பெயர். இந்த 570 கோடி விவகாரத்தில் ப்ளான் "பி'தான் நடந்திருக்கிறது' என விவரித்தார். <>ஆந்திராவும் தெலுங்கானாவும்தான் கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் மிகப்பெரிய குடோன்கள். அதனால், அங்கு பதுக்கி வைக்க இந்த பணம் கொண்டு செல்லப்படலாம் என சந்தேகித்து, உடனே தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் சொல்லி ஆக்ஷன் எடுக்க வலியுறுத்துவதற்காக அவரை தொடர்புகொள்ள... அவர் பிஸியாக இருந்தார். உடனே இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீமை தொடர்பு கொண்டு விவரித்தேன்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் கொண்ட ஒரு உயர்மட்ட டீம் இதனை விசாரித்தால் நிறைய விவகாரம் வெடிக்கலாம்  என சொன்னேன். அதன்பிறகே, கண்டெய்னர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது'' என்கிறார் தேவசகாயம்.<கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலும் நம்மிடம் பேசிய அவர், ""இந்த விவகாரத்தில்  பல கேள்விகளுக்கு விடை இல்லை. 18 மணி நேரம் கழித்து,  இது எங்களுடைய பணம்தான் என்கிறது ஸ்டேட் பேங்க். ஆனா, அதற்கு முறையான ஆவணங்களை காட்டவில்லை. 4 நாள் கழித்து ஆவணங்களைக் காட்டுகிறார்கள். ஆவணங்கள் தயாரிக்க இந்தக் கால அவகாசம் தேவைப்பட்டதா? <>பணத்தை எடுத்துச் செல்லும்போது வழியில் சிக்கல் ஏற்பட்டால் உடனே அதனை சமாளிப்பதற்காக டெபுடி ஜி.எம். ரேங்கில் உள்ள அதிகாரி ஒருவர், இது தொடர்பான ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்படுவார். அப்படி எந்த அதிகாரியும் உடன் செல்லாதது ஏன்?

கண்டெய்னர் லாரியை பறக்கும் படையினர் மடக்கிப் பிடித்தபோது, உண்மையான வங்கி ஊழியர்களாக இருப்பின் அங்கேயே நின்றிருப்பார்கள். ஆனால் லாரியின் டிரைவர் ஓடிப்போனது ஏன்? அதிகாரிகள் கண்காணிக்க வாகனத்தில் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் பொருத்தியிருக்க வேண்டும். பிடிபட்ட வாகனத்தில் அப்படி எதுவும் இல்லையே ஏன்?

கண்டெய்னரில் இருப்பது 570 கோடிதான் என்று எப்படி கணக்கிட்டார்கள்? 570 கோடியை எடுத்துச்செல்ல 3 கண்டெய்னர்கள் எதற்கு? 3 கண்டெய்னர்களின் நீளம் ஒவ்வொன்றும் 32 அடி இருக்கிறது என்கிறார்கள். அப்படியானால் அதன் நீள அகல உயரங்களை வைத்து கணக்கிடும் போது பல ஆயிரம் கோடி ரூபாய் அதில் இருந்திருக்க வேண்டும். பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்கிற விசாரணையின் போது விசாகப்பட்டினம், விஜயவாடா என மாத்தி மாத்தி சொன்னது ஏன்?

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்திலும், பண பரிவர்த்தனைகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் இப்படி ஒரு ரிஸ்க்கை எந்த ஒரு வங்கி நிர்வாகமாவது எடுக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் ஏன் மௌனமாக இருக்கிறார்? அதனால், மத்திய நிதித்துறையோ அதன் கீழ் இயங்கும் மற்ற துறைகளோ இதனை விசாரித்தால் உண்மை வராது. ரிசர்வ் வங்கியின் சீனியர் அதிகாரி, தேர்தல் ஆணையத்தின் சீனியர் அதிகாரி, சி.பி.ஐ.யின் சீனியர் அதி காரிகளை கொண்ட ஒரு டீம் விசாரித்தால்  உண்மைகளும் மர்மங்களும் வெளிப்படலாம்.
பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தபோது, அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான கறுப்புப் பணம்தான் அவை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்காமல் நாடு உருப்படாது'' என்று விரிவாக விவரித்தார் மிக கோபமாக தேவசகாயம்.
-இரா.இளையசெல்வன்<படம் : அசோக்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக