ஞாயிறு, 22 மே, 2016

மாவட்ட நிர்வாகிகள் மீது ஸ்டாலின் அதிருப்தி!

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, மே 23 ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். ஆனால், இந்த தேர்தலில் திமுக வெறும் 98 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மிகக்குறைந்த இடங்களில் வெற்றியை திமுக பறிகொடுத்தது.திமுக வெற்றிக்காக, நமக்கு நாமே போன்ற பல திட்டங்களை தேர்தல் முன்பே மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார். ஆனால், மாவட்ட அளவில் திமுக நிர்வாகிகளின் மோசமான செயல்பாடுகளால் மு.க.ஸ்டாலின் மிகவும் மூட்வுட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அவர் பல நேரங்களில் மிகவும் சோர்வாக காணப்படுவதாகவும், இதனைக் கண்டு அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மிகவும் வருத்ததில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, மு.க.ஸ்டாலின் மனக்குமுறல்களில் இருந்து விடுபட அவர் தனது குடும்பத்தோடு விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக