திங்கள், 11 ஏப்ரல், 2016

கம்யுனிஸ்ட் MLA பொன்னுபாண்டி அதிமுகவில் இணைந்தார்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில், அக் கட்சியில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வான பொன்னுபாண்டி இணைந்தார்.சென்னை தீவுத்திடலில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.இந்த கூட்டத்தின் இறுதியின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வும் விருதுநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான பொன்னுபாண்டி முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மேலும், விருதுநகர் முன்னாள் மதிமுக எம்.எல்.ஏ. வரதராஜன், முன்னாள் அமைச்சர் கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. கலாநிதி, மன்னார்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஞானசுந்தரம் மற்றும் இசையமைப்பாளர் செளந்தர்யன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வும் விருதுநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான பொன்னுபாண்டி கட்சி மாறிய சம்பவம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், மக்கள் நலக்கூட்டணியையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக