திங்கள், 11 ஏப்ரல், 2016

தமிழ்நாட்டில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் இந்தியா பி ஆய்வுத்தகவல்

ஏப். 9 நீரிழிவு நோயின் பாதிப்பு மற்ற நோயின் பாதிப்பு களை விட கடந்த பத்தாண் டுகளில் படிப்படியாக அதி கரித்துள்ளது .குறிப்பாக தமிழ்நாட்டில் 10.4 விழுக் காடு நபர்கள் இந்த நோ யால் பாதிக்கப்பட்டுள் ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் அமைப்பின் இந்தியா-பி ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் நீரிழிவு நோய் தலையாய பிரச்சி னையாக பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் நீரிழிவு நோயை பொது சுகாதாரத்தில் முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் 15 மாநிலங்களில் இந்தியா-பி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தமிழ் நாட்டில் தான் அதிக நீரி ழிவு நோயாளிகள் உள் ளனர். தமிழ்நாடு சன்டீக ருக்கு அடுத்த நிலையில் உள்ளது என்று இந்த ஆய்வில் பங்கேற்ற சென் னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் மருத்துவர் அஞ்சனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10இல் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் டி.எஸ் பூச்சந் திரன் கூறினார்.
சென்னை யில் நீரிழிவு நோய் தொடர் பாக சில பகுதிகளில் ஆய்வு நடத்திய பிரபல நீரிழிவு மருத்துவர் மோகன், பல மக்களுக்கு இந்த நோய் பற்றி தெரியவில்லை; நோ யின் தீவிரத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறினார். மற்ற மாநிலங்களை விட தமிழ் நாட்டில் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது என்று மூத்த சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
நீரிழிவு நோய் வாழ்க் கையில் சிக்கல்களை ஏற் படுத்தும் என்று விழிப்பு ணர்வு இருந்தாலும் ஒரு சிலரே இதற்கான சிகிச்சை களையும் தொடர்ச்சியாக பரிசோத னைகளையும் செய்து கொள்கின்றனர்.
உலக அளவில் இந்தியா அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சமீப ஆண்டுகளாக இது திடீ ரென்று அதிகரித்து வரு கிறது.
1995 இல் ஒரு கோடியே 90 லட்சமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2015 ல் ஆறு கோடியே 68 லட்சமாக அதிகரித்துள்ளது என்று சர்வதேச நீரிழிவு கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத் தின் தென்கிழக்கு நாடு களுக்கான மண்டல இயக் குநர் பூனம் கேத்ரபால் சிங் கூறும் போது, சர்க்கரை பானங்களில் வரிவிதிப்பு மற்றும் சுகாதார நடவடிக் கைகளில் குறுக்கீடு செய்து மறு முதலீடு நடவடிக்கை மூலம் உண்மையான மாற் றத்தை கொண்டு வரஇய லும் என்று கூறினார். நீரிழிவு நோய் பக்கவாதம் மற்றும் இருதய நோய் களுக்கு வழி வகுக்கின்றன என்று உலகம் முழுவதும் உள்ள சுகாதார நிறுவனங் கள் கவலை தெரிவிக் கின்றன.
நீரிழிவு நோயின் இறப்பு விகிதம் இதய மற்றும் புற்றுநோய் இறப்பு விழுக்காட்டை விட குறை வாக இருப்பினும் .இந்த நோய் 2030 இல் உலகின் 7வது மிகப்பெரிய உயிர்கொல்லி நோயாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் அஞ்சு கிறது. பல்வேறு நோய்களில் இறந்தவர்களில் 50 விழுக் காட்டினருக்கும் மேல் நீரிழிவு நோய் இருப்பதாக பூச்சந்திரன் கூறினார். விடுதலை.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக