திங்கள், 11 ஏப்ரல், 2016

வைகோ மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்....இசைவேளாளர் சமுக அவமதிப்பு.....வ.உ.சி பேரவை

மதுரை, ஏப்.7:மதுரையில் வ.உ.சி. இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கனகவேல் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். . அதில், இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவரும், மூத்த அரசியல் வாதியுமான கருணாநிதியை அவதூறாக பேசி வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து கனகவேல் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதி குறித்து வைகோ பேசியதை கண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க வ.உ.சி. இளைஞர் பேரவை பாடுபடும் என்றார்  maalaisudar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக