முதலமைச்சர்
ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கு செய்யப்படும் என கூறியதையடுத்து, அதற்கு
பதிலடியாக பிஜெபியில் சமீபத்தில் இணைந்த பெண் அரசியல்வாதியின் பேச்சு
வைரலாகி வருகிறது. பிஜெபி உறுப்பினரான ஜமீலா படிப்படியாக மதுவிலக்கு
அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஒரு போலியான பாசாங்குத்தனம் என
குற்றஞ்சாட்டியுள்ளார். வீடியோ பார்க்கவும்.
மதுவுக்கு எதிராக போராடிய சசி பெருமாளின் பெயரை குறிப்பிட்டு பேசிய
ஜமீலா “ அம்மா, மதுவிலக்கை பற்றி முன்னரே பேசியிருந்தால் சசிபெருமாள்
மரணமடைய வேண்டிய நிலை வந்திருக்காது. சசிபெருமாளை இறக்க வைத்தது இந்த
பெண்மணி தான். ஒருபுறம் குடிங்கன்னு ஊத்தி கொடுத்திட்டு மறுபுறம் தாலி
எல்லாம் அறுக்கிறாங்க. அதோட அம்மான்னு அழைக்கவும் சொல்றாங்க” என கடுமையாக
குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆன்லைனில் பரவி வரும் இந்த வீடியோ 1,61,000 முறை பார்க்கப்பட்டுள்ளதுடன், 7400 முறை பகிரப்பட்டுள்ளது.
முன்னாள் அகில இந்திய சமத்துவக்கட்சி பெண்கள் பிரிவு தலைவர்களுள் ஒருவரான இவர் சமீபத்தில் பிஜெபியில் இணைந்தார். ச.ம.க.,வில் தனது பதவியை ராஜினாமாவை செய்ததை தொடர்ந்து, அவரை குறித்து அக்கட்சியினர் கூறிய பாலியல் வன்சொற்கள் கலந்த கருத்துக்களை கடுமையாக கண்டித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த சரத்குமாரால் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: thenewsminute.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக