செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஆர்.கே நகரில் குஷ்பு? ஜெயலலிதாவை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி....சபாஷ் சரியான போட்டி..

தமிழக முதல்வர் ஜெயலலிதா  ஆர்.கே.நகரில்
போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் குஷ்புவை களம் இறக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே குஷ்பு மயிலாப்பூரில் களம் இறங்குகிறார் என்ற ஒரு செய்தி வந்தது. ஆனால் தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என குஷ்பு திட்டவட்டமாக அந்த செய்தியை மறுத்தார். இந்நிலையில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது.திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஆர்.கே.நகர் தொகுதி திமுகவுக்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு வலுவான வேட்பாளரை களம் இறக்க விரும்பும் திமுக காங்கிரஸின் குஷ்புவை அங்கு களம் இறக்கி ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது.ஆர்.கே.நகரை காங்கிரசுக்கு கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு தொகுதியை பெறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திமுக தரப்பு இளங்கோவனிடம் பேசி, இளாங்கோவன் குஷ்பு மற்றும் காங்கிரஸ் தலைமையிடமும் பேசிவிட்டதாக பேசப்படுகிறது.

;ஜெயலலிதாவை எதிர்த்து ஜெயிக்க முடியாவிட்டாலும், அவருக்கு சென்னை மழை வெள்ளத்தை வைத்து நெருக்கடி கொடுக்கவே இந்த திட்டம் எனவும் பேசப்படுகிறது. குஷ்பு தரப்பிலும் இதற்கு கிரீன் சிக்னல் வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குஷ்புவின் இலக்கு தேசிய அரசியல் தான் என்பதால் இதில் தோற்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.  webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக