வெள்ளி, 8 ஏப்ரல், 2016

மயிலாபூரில் காங்கிரஸ் குஷ்பு.....அதிமுக Ex டிஜிபி நடராஜ்... இளங்கோவன் முயற்சி.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவை மயிலாப்பூர் தொகுதியில் களம் இறக்கி அதிமுக வேட்பாளரை வீழ்த்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன் விரும்புவதாக கூறப்படுகிறது. >மயிலாப்பூரில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் முன்னாள் டிஜிபி நட்ராஜ் ஆவார். மயிலாப்பூர் தொகுதியானது அதிகம் படித்தவர்களை கொண்ட தொகுதி என்பதால் அங்கு நட்ராஜ் வெற்றி பெறுவது எளிது என்கிறார்கள்.திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் குஷ்புவை களம் இறக்கினால் தான் நட்ராஜை வீழ்த்த முடியும் என இளங்கோவன் திட்டமிட்டுள்ளார். இதனால் குஷ்பு அங்கு களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. >ஆனால் குஷ்பு தான் தேர்தலில் போட்டியிடப்போவதே இல்லை என திட்டவட்டமாக அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு அந்த தொகுதியை தனது ஆதரவாளருக்கு வழங்க வேண்டும் என பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.>மேலும் இந்த தேர்தலில் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என முன்னதாக பேசப்பட்டது. ஆனால் விஜயதரணி திரும்பவம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க போவதாக தகவல்கள் வந்துள்ளது  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக