வெள்ளி, 8 ஏப்ரல், 2016

காங்கிரஸ் 12 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள்... யசோத, திருநாவுக்கரசர், வசந்தகுமார், விஜயதரணி......

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குஷ்பு, திருநாவுக்கரசர், வசந்தகுமார் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து நேற்று உடன்பாடு கையெழுத்தானது.  இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமகா வெளியாகும் முன்னதாக 12 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர்-டி.யசோதா; அம்பத்தூர்- அசன்; ராயபுரம்- மனோ; மயிலாப்பூர்-குஷ்பு; செய்யாறு- விஷ்ணு பிரசாத்; ஓசூர்- கோபிநாத்; காட்டுமன்னார்கோயில்- வள்ளல் பெருமான்; பாபநாசம்- ஆர்.கே.ராஜா; திருச்சி கிழக்கு- ஜெரோம் ஆரோக்கியதாஸ்; அறந்தாங்கி- திருநாவுக்கரசர்; நாங்குநேரி- வசந்த குமார்; விளவங்கோடு- விஜயதாரணி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கக் கூடும் என கூறப்படுகிறது.
2016 தமிழக தேர்தல் நிலவரத்தை தொகுதிவாரியாக ஒரே இடத்தில் பார்க்க

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக