திங்கள், 25 ஏப்ரல், 2016

அன்புநாதன்...தங்க சுரங்க காவலாளி... இன்னும் வெளிவராத மர்மங்கள்.

அதிமுக பிரமுகர் அன்புநாதன், அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமிகளில் ஒருவர் என கூறப்படுகிறது.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த, அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கரூர் - ஈரோடு சாலையில் உள்ள கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதில் இருந்து விலகி, புதிய நிதி நிறுவனம் துவங்கினார் அவரது மகன் அன்புநாதன்.இந்த நிலையில், தனது உறவினரும், கரூர் அதிமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நட்பு கிடைத்துத. அது முதல் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றார். பின்பு, திண்டுக்கலில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு செல்லும் போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நட்பு கிடைத்தது. இதனையடுத்து, அவரது பைனாஸ் தரம் கிடுகிடு என உயர்ந்தது. பின்பு, சினிமா பைனான்சியராக வலம் வந்தார். தற்போது, தமிழக அமைச்சர்கள் பலருக்கும் பணம் சப்ளை செய்யும் நபராக வலம் வருகிறார் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக