திங்கள், 25 ஏப்ரல், 2016

110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன - முதல்வர் ஜெயலலிதா.....

சட்டப்பேரவையில் கடந்த 5 ஆண்டு களில் 110-வது விதியின் கீழ், தான் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத் தும் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்று முதல் வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் எந்த தொகுதியிலும் திமுக வெற்றிபெறப் போவதில்லை என்பது திமுக தலை வர் கருணாநிதிக்கும், திமுகவினருக் கும் தெரிந்துள்ளது. அதனால்தான், ‘2011 தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகளில் 90 சத வீதம் நிறைவேற்றப்படவில்லை’ என பொய் பிரச்சாரம் செய்து வரு கின்றனர். அளித்த வாக்குறுதி கள் அனைத்தும் நிறைவேற்றப்பட் டுள்ளன என்று பொதுக்கூட்டங் களில் விரிவாக எடுத்துக் கூறிவரு கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவையில் 110-வது விதியின் கீழ் பல அறிக்கைகளை அளித் துள்ளேன். இவற்றில் சில திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக் கூடியவை. கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்ற அறிவிப்புகள் ஓரிரு ஆண்டுகளில் நிறைவேற்றக் கூடியவை. சில்லஹல்லா நீர் மின் திட்டம் போன்ற பெரும் திட்டங்கள் சில ஆண்டுகளில் முடிக்கக் கூடி யவை.
110 விதியின் கீழ் நான் அறி வித்த அனைத்தும் செயலாக்கத் துக்கு எடுத்துக் கொள்ளப்பட் டுள்ளன. ஆனாலும், பொய் பிரச்சாரம் ஒன்றையே தங்கள் ஆயுதமாக நம்பியுள்ள திமுக வினர், 110 விதியின் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை என திரும்பத் திரும்ப பேசி வருகின்றனர். எனவே, ஆண்டுதோறும் நான் வெளியிட்ட அறிவிப்புகள் நிறை வேற்றப்பட்டுள்ளன என்பதை துறை வாரியாக விளக்க விரும்புகிறேன். 3 துறைகள் குறித்த விவரங்களை தற்போது விளக்குகிறேன்.
பள்ளிக்கல்வி துறை
பள்ளிக்கல்வி துறையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர் களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், ஜியாமெட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவர்களுக்கு வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
புத்தகச் சுமையை குறைக்க, முப்பருவ முறை முதலில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அறிமுகப் படுத்தப்பட்டு, 9-ம் வகுப்புக்கும் விரிவாக்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2012 முதல் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த் தப்பட்டுள்ளன. ஆசிரியர், பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத் தப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இவை உட்பட 2011 முதல் 2015 வரை 5 ஆண்டுகளில் 45 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உயர்கல்வி துறை
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை, திருச்சி மாவட்டம் ரங்கம் ஆகிய இடங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங் கப்பட்டுள்ளன.
திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், ஈரோடு, அரியலூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 8 இடங்களில் பாலிடெக்னிக் கல் லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம், கன்னியாகுமரி, திண்டுக் கல், ஈரோடு, மதுரை, திருவள்ளூர், ராமநாதபுரம், நெல்லை, விருது நகர், நாகை, வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இருபாலர் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2014-15 கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 163 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரை யாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 27 அறிவிப்புகள் செய லாக்கத்துக்கு வந்துள்ளன.
ஊரக, உள்ளாட்சித் துறைகள்
சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான அலகுத் தொகை 2013-14 முதல் ரூ.2 லட் சத்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட் டுள்ளது. இந்திரா நினைவு குடி யிருப்பு திட்டத்தில், வீட்டுக்கான அலகுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிர மாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் 16,320 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். ரூ.300 கோடி மதிப்பில் 8 லட்சம் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
2014-15ல் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.6,171.74 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் கிராமப்புற இளை ஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது வரை சுயஉதவிக் குழுக்களில் உறுப் பினராக இல்லாத ஆதரவற்றோர், ஏழைகள், நலிவுற்றோரைக் கொண்டு 11,452 புதிய சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக் காக, அம்மா கைபேசி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவை போன்ற 48 அறிவிப்புகள் நிறை வேற்றப்பட்டுள்ளன.
பிற துறைகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகும்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார். tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக