திங்கள், 25 ஏப்ரல், 2016

வைக்கோ போட்டி இடமாட்டார் .விட்டு கொடுத்தார்? ..அதிமுக கடம்பூர் செல்வராஜும் நாயக்கர் ஜாதி.......பாவம் திருமா கெஞ்சல்.....

 வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல் நாயக்கர் இன மக்கள் அதிகம் உள்ள கோவில் பட்டியை பாதுகாப்பாக தேர்தெடுத்து ஒதுங்கிய வைகோ,கடம்பூர் ராஜு போன்றவர்கள் நாயக்கர் சாதி . திமுக வேட்பாளருக்கு மற்ற இனத்தவர்,தேவர் வாக்குகள் விழுந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற பரவலான கருத்துதான் வைகோவை போட்டியிடச்செய்யாமல் ஓட வைத்துள்ளது.இதுதான் கோவில் பட்டி தொகுதியில் இன்றைய பர,பர செய்தி.இப்போது திமுக,சாதிக்கலவரம் என்று அறிக்கை வாசித்து தனது மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துக்கொண்டுள்ளார் வைகோ.
அ தி மு க வின் கருணாஸ் திடீர் என்று வைகோ விற்கு எதிர்ப்பு தெரிவிக்க, வைகோ ஏன் தி மு க வின் மேல் பழியை போட்டு செய்தி அளிக்கிறார்??? . அதிலும் முடிவு கொண்டுவராமல் வேறு ஒரு தொகுதியில் போட்டி இட்டாலும் இடுவேன் என்று குழப்புகிறார்????? என்று தீவிரமாக மிக சாதாரணாமாக யோசித்தால்....கடந்த 3 நாட்களாகவே வரலாறு காணத அளவிற்கு அ தி மு க வினரின் கோடி கணக்கான பணம் பல இடத்தில் பறிமுதல் ஆகும் செய்தியையும், விவாதங்களையும், இணையதள விழிபுணர்வையும் அ தி மு க விற்கு எதிராக அமையாமல் பார்த்து கொள்ளும் முயற்சி அன்றி வேறு ஒன்றுமே இல்லை....இப்போது புரிந்து விட்டதா "B" டீமின் பிளான் பி திட்டம் .இந்த இடைநிலை ஆதிக்க ஜாதிகளால்  அதிகம் பாதிக்கப்படும் திருமா போன்றவரகள் இனியாவது இவர்களின் கபடத்தை  புரிந்து கொள்ள வேண்டும் 

சென்னை, ஏப்.25 (டி.என்.எஸ்) மக்கள் கூட்டணியில் உள்ள மதிமுக-வின் பொதுச் செயலாளர், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததுடன், அவர் போட்யிடுவதாக இருந்த கோவில்பட்டி தொகுதியில் மதிமுக சார்பில் மாற்று வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார்.
வைகோவின், இந்த முடிவால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். //tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக