சனி, 2 ஏப்ரல், 2016

மோடி ஒபாமாவுக்கு : பயங்கரவாதிகளை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கவேண்டும் ......ஒரு சுயவிருப்பம்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த
இரவு விருந்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாதிகளை புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வேட்டையாட வேண்டும் என வலியுறுத்தினார். பெல்ஜியம் சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 4வது அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் சென்றடைந்தார். மூன்றாவது முறையாக அமெரிக்காவும், இரண்டாவது முறையாக வாஷிங்டனுக்கும் சென்றுள்ள மோடி, முதலில் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீயை சந்தித்து பேசினார். இவரது சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பதிவில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மோடி பதிவிட்டுள்ளார். அடுத்ததாக லிகோ விஞ்ஞானிகள் குழுவினரை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.


பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வெள்ளை மாளிகையில் அளித்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இவ்விருந்தில் 50க்கும் மேற்பட்ட உலக தலைவர்களும் கலந்து கொண்டனர்.

விருந்தில் அவர் பேசியதாவது: பிரமாண்ட காட்சிகள் போல் பயங்கரவாதிகள் வன்முறைகளை அரங்கேற்றுகின்றனர், பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்டு பயங்கரவாதிகளை தேடிக் கொண்டிருக்கக் கூடாது. பயங்கரவாதிகளின் அணுஆயுத பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நகரங்களில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகளை வேட்டையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக