வெள்ளி, 8 ஏப்ரல், 2016

வைகோவின் ஜாதீய உணர்வு ! பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இவங்கதான் பி டீம் ஆக இருக்குமோ?

வைகோவுக்கு கூட்டணியில் எச்சரிக்கை! 'போக்கு இப்படியே தொடர்ந்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்' என, கம்யூனிஸ்டுகள், வைகோவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ பேசுபவை, கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்துகிறது என, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, வைகோவுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.எல்லை கடந்த பேச்சு:'
தே.மு.தி.க.,வை கூட் டணிக்கு இழுக்க, 500 கோடி ரூபாய் பணம் கொடுக்க தி.மு.க., முயற்சி; பத்திரிகையாளர்கள் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகின்றனர்.கோவில்பட்டியில் நடந்த ரயில் மறியலின் போது கொரில்லா தாக்குதல் நடத்தினால் என்ன செய்வீர்கள்  
 தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., சந்திரகுமார் ஆகியோர் வேறு தொழில் செய்யலாம்; கருணாநிதி ஜாதி பெயரைச் சொல்லி திட்டியது' என, வைகோவின் பேச்சும் செயலும், நாளுக்கு நாள் எல்லை கடந்து சென்றது.    வைகோ ஜாதி வெறியர்தான். அவரை தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் இதை அனுபவித்து உள்ளனர். அவருடைய இனத்தவர்கள் தவிர வேறு யார் சமைத்தாலும் சாப்பிட மாட்டார் என்று அவருடைய செயலர் ஒருவரை அறிமுகப்படித்தி வைப்பார். இவரை கூப்பிடுங்கள் இவர் சமைத்து கொண்டுவருவார். இதைத்தான் வைகோவிற்கு பரிமாற்ற வேண்டும் என்று. பல சமயங்களில் பொது மேடைகளில் பலருடைய இனத்தின் பெயரை இவர் சொல்லி இருக்க கேட்டிருக்கிறோம். வைகோவின் வேடம் கலைகிறது

இதனால், மக்கள் நலக்கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் குறையத் துவங்கியுள்ளதாக, கூட்டணிக்கு உள்ளேயே பெரும் புகைச்சல் ஏற்பட்டு உள்ளது.

திசை மாறும்:குறிப்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, ஜாதி பெயரைச் சொல்லி திட்டியது,

அனைத்து தரப்பினர் மத்தியிலும் வைகோ மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிருப்தி, கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் எதிரொலித்தது. சில கம்யூனிஸ்ட் தலைவர்கள், 'வைகோவை கண்டிக்க வேண்டும்; இல்லையேல், மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரம் திசை மாறிச் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 'இத்தனையாண்டு காலம், கம்யூனிஸ்ட்கள் பின்பற்றி வந்த அரசியல் நாகரிகம் காற்றில் பறக்கும். கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் மத்தியில் நிலவும் இமேஜும் மாறிவிடும்' என, கட்சித் தலைமையிடம் காட்டமாக பேசியுள்ளனர்.
கம்யூனிஸ்டு தலைவர்கள், இந்த காட்டத்தை அப்படியே வைகோவிடமும் காட்டியதாகக் கூறப்படுகிறது. 'உங்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு அரசியலை, கூட்டணிக்குள் கொண்டு வராதீர்கள். அது, கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்னையை உண்டாக்குகிறது. மக்கள் நலக்கூட்டணி துவங்கிய போது திட்டமிட்ட குறைந்தபட்ச செயல் திட்டப்படி, தேர்தல் பிரசாரத்தையும், கொள்கை விளக்கங்களையும் செய்யுங்கள்' என கூறியுள்ளனர்.
மறு பரிசீலனை:மேலும், 'உங்களின் வெறுப்பு அரசியல் போக்கு தொடருமானால், கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும்' எனவும், வைகோ விடம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதையும் மீறி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனிப்பட்ட வெறுப்பு அரசியலைத் தொடர்ந்தால், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேற,கம்யூனிஸ்டுகள் தயாராகி வருவதாக சொல்கின்றனர்.
இதற்கிடையே வைகோவின் பேச்சு குறித்து, விடுதலை சிறுத்தைகளும் தங்களின் நிலையை தெளிவுபடுத்தி உள்ளனர்.
ஜாதி அரசியல்:'தேர்தல் களத்தில் பேசுவதற்கு, ஆயிரம் பிரச்னைகள் உள்ள போது, ஜாதி அரசியல் செய்வதை ஏற்க முடியாது' என, வைகோவுக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.இதன் மூலம் கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இணைந்து வைகோவின் போக்குக்கு, 'செக்' வைத்துள்ள னர். ஆனால், இது எத்தனை நாளுக்கு நீடிக்கும் என தெரியவில்லை என்கிறார், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர்.
ஒருங்கிணைப்பாளர் மாற்றம்?மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க., அணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ பேசுவது, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் கட்டுப்படுத்துகிறது. 72 வயதான அவர், தன் வயதுக்கேற்ப பேச மறுக்கிறார். இப்படி பேசுங்கள் என அவரிடம் சொல்ல, கூட்டணி கட்சித் தலைவர்கள் தயங்குகின்றனர்.
எனவே, ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து அவரை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்கலாம் என்ற பேச்சும், மக்கள் நலக் கூட்டணிக்குள் நிலவுகிறது. கூட்டணியில் பெரிய கட்சி என்ற முறையில், ஒருங்கிணைப் பாளர் பொறுப்புக்கு, தே.மு.தி.க., மகளிர் அணித் தலைவர் பிரேமலதாவை நியமிக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஒருவேளை அப் பொறுப்பை அவர் ஏற்காத பட்சத்தில், திருமாவளவனை நியமிக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக