திங்கள், 25 ஏப்ரல், 2016

உளவுத்துறை அறிக்கையால் ஜெ., அதிர்ச்சி

நாகர்கோவில்;''அ.தி.மு.க., நிலை பற்றி உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையால் ஜெ., அதிர்ச்சி அடைந்துள்ளார்,'' என்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார். குமரி மாவட்டத்தில் அவர் பேசியதாவது:தி.மு.க., என்பது தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. 2011 தேர்தலில் வெற்றி பெற்ற ஜெ., அதன் பின்னர் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு சென்று மக்களை சந்தித்தது உண்டா? ஒரே ஒரு மாவட்டத்துக்கு மட்டும் செல்வார். அது நீலகிரி. கொடநாட்டுக்கு ஓய்வெடுக்க செல்கிறார். தேர்தல் வந்ததும் இப்போது நான்கு , ஐந்து நாட்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்கிறார். அதுவும் 20 வேட்பாளர்களை கொத்தடிமை களாக உட்கார வைத்து மூன்றாவது மாடியில் ராணி மங்கம்மா போல நின்று பேசுகிறார். இன்று அ.தி.மு.க., அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.

தி.மு.க., இரண்டாவதுஇடத்துக்கு கூட வரமுடியாது என்று ஜெ., பேசுகிறார். நான் சொல்கிறேன். இந்த தேர்தலில் அ.தி.மு.க. ,வுக்கு மூன்றாவது இடம் கூட கிடைக்காது. பூரண மதுவிலக்கு என்று
தி.மு.க., சொல்ல வில்லை என்று சொல்கிறார். கடந்த தி.மு.க., ஆட்சியில் மது விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது. 1300 கடைகள் குறைக்கப்பட்டன.

ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் மதுக்கடைகள் கூட்டப்பட்டது.டாஸ்மாக் தொடங்கப்பட்டதும், அரசே மது விற்கலாம் என்ற உத்தரவு போட்டதும் அ.தி.மு.க., அரசுதான். மது விற்பனைதொடர்பான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது அ.தி.மு.க., ஆட்சியில்தான். இது தொடர்பாக நான் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன். மது விலக்கு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை என்று சொல்வதற்கு ஜெ.,க்கு தகுதி இல்லை.
தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தால் 'கரப்ஷன்', 'கமிஷன்', 'கலெக்சன்' இருக்காது என்ற உத்தரவாதத்தை தருகிறேன். கடந்த தேர்தலில் 20 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்படும் என்று கூறிய ஜெ., அம்மா வாட்டர் என்றுகுடிநீரை விற்கிறார்.

அம்மா குடிநீரை சும்மா கொடுக்க முடியாதா?இப்போது சொன்னதை செய்தோம், சொல்லாததையும் செய்வோம் என்கிறாார்.

சொன்னதை செய்தோம் என்று கூறினால் கூட பொறுத்துக்கொள்ளலாம். சொல்லாததை செய்தோம் என்கிறார். ஆம். வீதிக்கு வீதி, சந்திக்கு சந்தி மதுக்கடைகள் திறப்போம் என்று சொல்லவில்லை. ஆனால் செய்து விட்டார்.செம்பரம்பாக்கம் ஏரியை திறப்போம் என்று சொல்ல வில்லை. ஆனால் திறந்துவிட்டார். இதனால் நுாற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர்.
சசிபெருமாள் கருணாநிதியை சந்தித்த ஒரே காரணத்தால்தான் அவர் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போது அதை பேசி முடிக்காமல் சாகடித்துவிட்டனர். இன்று உளவுத்துறை ஜெ.,க்கு அளித்துள்ள அறிக்கையால் ஆடி போய் உள்ளார். ஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி பெறுவது கூட கடினம் என்று அந்த அறிக்கையில் சொல்லப் பட்டுள்ளது. இதனால் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிப்பார்கள்.
ஐந்து ஆண்டுகள் கழித்த பின்னர் இப்போது சாதனையாக ஆடு மாடு கொடுத்த எண்ணிக்கை யை சொல்லிக்கொண்டிருக்கிறார். இதற்கு ஒரு முதல்வர் தேவை இல்லை. அதிகாரிகளே இதை செய்வார்கள். தமிழக மக்களை ஆடு மாடு மேய்ப்பவர்கள் ஆக்கி விட்டார்கள்.

இந்த ஆட்சியில் புதிதாக ஒரு மெகாவாட் மின் சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை. அண்ட புழுகு, ஆகாச புழுகு கேட்டிருக்கிறோம். ஜெயலலிதா புழுகு இப்போதுதான்கேட்கிறோம். இந்த ஆட்சியில் நில அபகரிப்பில் சிக்காத எம்.எல்.ஏ.க்களே இல்லை. ஜெ., கூட கொடநாட்டில் நிலம் அபகரித்துள்ளார். பஞ்சமி நிலத்தை அவர் திருப்பி கொடுப்பாரா. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும், என்றார்.  தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக