திங்கள், 25 ஏப்ரல், 2016

சீறீ பாய்கிறதா அடிபட்ட (காகித) புலி? பாஜகவுக்கு ஏனிந்த திடீர் கோபம்?

நேற்று முன்தினம், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வருமான வரித் துறையினர், தமிழகத்தில் நடத்திய ரெய்டு தொடர்பாக, பல சந்தேகங்களை பொதுமக்கள் முன் வைக்கின்றனர். 'இவ்வளவு நாள் பிரச்னை இல்லாமல் ஓடிக்கிட்டு இருந்ததே... திடீர்னு எதுக்கு ரெய்டு?' என்பது ஒரு கேள்வி. 'இதை எதுக்கு பெரிசுபடுத்தணும்? சத்தீஸ்கரிலும் அன்னைக்கே ரெய்டு நடத்தினாங்களே... அதை வசதியாய் மறைத்து விட்டு, இட்டுக் கதை சொல்றீங்களா...' என்பது இன்னொரு கேள்வி. சத்தீஸ்கரில் நடந்தது, வருமான வரித் துறை, தானாகவே நடத்திய சோதனை. தமிழகத்தில் நடந்தது, தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி நடந்தது. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு.  பிஜேபி அல்லது காங்கிரசு மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு என்னதான் குடைச்சல் கொடுத்தாலும் தமிழகத்தில் மத்திய கட்சிகளை வளர்க்கவே முடியாது. காரணம் ஒருங்கிணைப்பு இல்லை ..ஆளாக்கு வாய்க்கு வந்தபடி பேசி மானம் கெட்டு நிக்கிறது. ஆனால் இந்தமுறை BJP கொஞ்ச நஞ்ச இடங்களையாவது வாங்க மோடி என்ற விளம்பரதாரரை முன்னிறுத்தாமல் இருப்பது ஏன்? ஏன்னா மோடி முகமூடி கிழிஞ்சு 2 வருஷம் ஆகிடுச்சு.இப்போ ஒரு பயலும் மோடி பேச்சை கேட்பதே இல்லை.மோடி பற்றிய கட்டுரை என்றாலே நான் அடுத்த செய்திக்கு போயிருவேன்.அந்த அளவுக்கு நம்பிக்கையின்மையை கொண்டு வந்துட்டாங்க.


ஏன் இந்த ரெய்டு? இதை அறிந்து கொள்ள, பல முன் கதைகளைப் படிக்க வேண்டும்.கடந்த லோக்சபா தேர்தலின் போதே, அ.தி.மு.க.,வுடன் எப்படியும் கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என, பா.ஜ.,வில், பிரதமர் மோடியில் இருந்து அமித் ஷா வரையில் ஆசைப்பட்டனர். ஆனால், 'நானே பிரதமர் ஆக ஆசைப்படும் போது, நான் ஏன் பா.ஜ.,வுடன் என் வெற்றியை பங்கு போட வேண்டும்?' என, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், தனித்தே போட்டியிட்டார் ஜெயலலிதா.

அனுசரித்து போக...வெற்றி அவருக்கு சாதகமாக இருந்தாலும், அதை அவர் ரசிக்க முடியாத அளவுக்கு, தமிழகத்தை தவிர்த்து, மற்ற எல்லா இடங்களிலும் பா.ஜ., பெரும் வெற்றி பெற்றுவிட்டது. 273 என்ற மந்திர எண்ணைக் கடந்து, 323 என்ற எண்ணிக்கையை எட்டியது.

இருந்த போதும் ராஜ்யசபாவில், போதுமான அளவுக்கு பா.ஜ.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அதே நேரம், ராஜ்யசபாவில், புதுச்சேரிக்கும் சேர்த்து, அ.தி.மு.க.,வுக்கு, 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பா.ஜ., இதனாலேயே, அ.தி.மு.க.,வை அனுசரித்து போக முற்பட்டது. அதனால், கசப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
உறவை நீடித்தது. நில எடுப்பு மசோதா தொடர்பாக, துவக்கத்தில்பா.ஜ.,வுடன் நல் முகம் காட்டிய, அ.தி.மு.க., திடுமென பின்வாங்கியதில், பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., மீது கடும் கசப்பு ஏற்பட்டது. இருந்த போதும் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியிலான நட்பை நல்லவிதமாகவே தொடர வேண்டும் என, முடிவெடுத்த மோடி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் தண்டித்து, அவர் ஜாமினில் இருந்த போது இல்லம் தேடி சென்று, உடல் நலம் விசாரித்து சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஜெயலலிதாவை, இல்லம் தேடி வந்து பார்த்து சென்றார்.

ஆனாலும், ராஜ்யசாபாவில் பா.ஜ., கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், அ.தி.மு.க., - பா.ஜ.,வை விட்டுவிலகியே நின்றது.இதனால், மத்திய அமைச்சர்கள் பலரும், அடிக்கடி தமிழகம் வர துவங்கினர்.தங்கள் துறை தொடர்பான நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொண்டனர். பியுஷ் கோயல், சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் என, பல அமைச்சர்களும் தமிழகம் வந்து சென்றனர்.

இதை, தமிழக அரசு தரப்பில் விரும்பவில்லை. லேசுபாசான அதிருப்திகளை அதிகாரிகள் மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், அ.தி.மு.க., தலைமை, 'ரியாக்ட்' செய்யவில்லை. கடந்த நவம்பர் இறுதியில், தமிழகத்தை மழை, வெள்ளம் புரட்டி போட்டது. தமிழக முதல்வரான ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி இருக்க, டில்லியில் இருந்து கிளம்பி வந்தார் பிரதமர் மோடி. தன்னிச்சையாகவே, பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்த்தவர், சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகளுக்காக முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார்.

அதிகரித்த இடைவெளி:பிரதமர் வருகிறார் என தெரிந்ததும், அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தார் ஜெயலலிதா. இப்படி இரண்டு தரப்புக்குமான இடைவெளி அதிகரிக்க துவங்கியது.இருந்த போதும், தமிழக பா.ஜ., தலைவர்கள் பலரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என விரும்ப, கடைசி கட்ட முயற்சியும் எடுக்கப்பட்டது. அ.தி.மு.க.,வின் டில்லி முக்கிய பிரமுகரை சந்தித்து, பா.ஜ., முக்கிய தலைவர் பேசினார்.

மூன்றில் ஒரு பங்கு இடங்கள், தேர்தல் முடிந்ததும்கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என, கூட்டணி பேசினர்.ஆனால் அதை, அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. தமிழகத்தில் பா.ஜ.,வால் எந்த நன்மையும் இல்லை. கடந்த முறை போல இம்முறையும் கிட்டத்தட்ட தனித்து தான் போட்டி. ஒன்றிரண்டு சிறிய கட்சிகளும் கூட, sement
இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என, முடிவெடுத்தார் ஜெயலலிதா.

அடிபட்ட புலியாக...: இதை பா.ஜ., ரசிக்கவில்லை. இருந்த போதும், லோக்சபா தேர்தலைப் போல, விஜயகாந்தை வைத்து கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி. இதனால், தமிழகத்தில் தனித்து விடப்பட்டு விட்டது.விளைவு*ஜெயலலிதாவை சந்திக்க முடிய வில்லை என, பா.ஜ., மத்திய அமைச்சர்கள் கடும் விமர்சனம்* ஜெ., பொதுக்கூட்டங்களுக்கு வந்து வெயிலால் இறந்தவர்களை வைத்து, தீவிர அரசியல்*ஜெயலலிதா போகும் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான நெருக்கடி. அதனால், அவர் தன் பிரசார பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியதானது* தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் தீவிரம்*முடுக்கி விடப்பட்ட வருமானவரித்துறை; தமிழகம் முழுவதும், 45 இடங்களில் ரெய்டு*கரூரில் அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் வீடு, குடோன் ரெய்டு. பல கோடி ரூபாய் பறிமுதல்; அதே கரூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மணிமாறன் வீடு, குடோனில் ரெய்டு; 5 கோடி ரூபாய் பறிமுதல்.

இப்படி தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், வருமான வரித் துறை மூலமாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் கூட்டணிக்கு வராத அ.தி.மு.க.,வை பழிவாங்கத் துடிக்கிறது பா.ஜ., என, ஆளும்கட்சித் தரப்பில் இருந்து பொருமல் சத்தம் கேட்க துவங்கி உள்ளது.

தேர்தல் நடக்க இன்னும், 20 நாட்களே உள்ளன. பொருமல் சத்தம் கூட வெளிவர முடியாத அளவுக்கு நெருக்கடி அதிகரிக்குமா அல்லது நெருக்கடியைத் தாண்டி, அ.தி.மு.க., வெற்றிக் கனி பறிக்குமா என்பதை அறிய, வழக்கம் போல காத்திருப்போம்!
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக