திங்கள், 25 ஏப்ரல், 2016

பொன்.ராதாகிருஷ்ணன் : அதிமுகவின் ரூ.1000 கோடி அனைத்து தொகுதிகளிலும் போய் சேர்ந்துவிட்டது..வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக

Union minister Pon.Radhakrishnan accusing around 1000 crores of rupees will be distributeசென்னை: தமிழகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி அளவுக்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் எள்ளளவுதான்.


இன்னும் அதிக பணம் பத்திரமாக அனைத்து தொகுதிகளுக்கும் ஏற்கனவே, சென்று சேர்ந்துவிட்டது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்கும். பாஜக வெற்றியை தவிர்க்க முடியாது. இதுகுறித்து நாராயணசாமி கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்தாகும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 2 நாட்கள் முன்பு இதேபோன்ற பண பதுக்கல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். அதிமுகவினரிடம் மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியினரிடமும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமும் சோதனை நடத்த வேண்டும் என்றும் தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ்.ஒனிந்திய.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக