திங்கள், 11 ஏப்ரல், 2016

அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகியது...வேல்முருகன் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். செவ்வாய் கிழமை அந்த கட்சியின் அவசர பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.>தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒரு வாரம் முன்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆனால் அதிமுகவின் தொகுதிகள் பட்டியலில் எந்த தொகுதியும் அந்த கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.நான் எனது அதிர்ச்சி குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறி இத்தனை நாட்களான பிறகும், அதிமுக எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.
நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளேன் என வேல்முருகன் கூறினார். மேலும் வரும் 12ம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றார் வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக