சனி, 9 ஏப்ரல், 2016

ஜெயலலிதா:படிப்படியா மதுவிலக்கு....கொலை கொலையா முந்திரிக்கா......நரியை நரியை சுத்திவா.....

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற ஜெயலலிதா பேச்சுக்கு கலைஞர் பதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசினார். அப்போது அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன்’’என்று கூறினார். மதுவிலக்கு பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது என்றும் கூறினார். அவர் மேலும், அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார். இதுகுறித்து திமுக தலைவர் கலைஞரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சிறிது நேரம் எதுவும் சொல்லாமல் செய்தியாளர்களை அமைதியாகப்பார்த்த கலைஞர், ‘’உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் நாளை மாலை பதில் சொல்லப்படும்’’ என்று தெரிவித்தார்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக