சனி, 9 ஏப்ரல், 2016

பெண்களின் பொற்கால ஆட்சி இது... மீண்டும் தொடரவேண்டும் : பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெ

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பெண்களுக்கு பொற்கால ஆட்சி இதுவாகும். இந்த நல்லாட்சி தொடரவேண்டும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் 22ம்தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 12 நாட்களே உள்ளன. அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், கூட்டணிக் கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் ஜெயலலிதா கடந்த 4ம்தேதி அன்று அறிவித்து 227 தொகுதிகளுக்கும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் அன்றைய தினமே வெளியிட்டார். கூட்டணிக் கட்சிகளும் 7 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறது. Jayalalitha kick start campaign in Chennai ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னை தீவுத் திடலில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். போயஸ் தோட்டத்தில் இருந்து தீவுத் திடலுக்கு கிளம்பிய ஜெயலலிதாவிற்கு வழி நெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தீவுத்திடலில் குவிந்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. வேட்பாளர்களை அறிவித்த கையோடு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. இன்று தீவுத் திடலில் ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்கவும் அவரை காணவும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் குவிந்துள்ளனர். தீவுத்திடலில் ஜெ. பேச்சு மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டத்தில் இருக்கையில் அமர்ந்த படியே ஜெயலலிதா எழுச்சியுரையைத் தொடங்கினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தனது வாழ்வு மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது என்றும், மக்களால் நான்... மக்களுக்காக நான் என்றும் கூறினார். தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டும், தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள். 2016 சட்டசபைத் தேர்தலிலும் நல்லாட்சி தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் அதாவது உங்களால் நான் உங்களுக்காகவே நான். மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழகம் மின்மிகை மாநிலமாகியுள்ளது, எங்கும் எப்போது மின்சாரம் கிடைக்கிறது என்றார். பெண்களின் பொற்காலம் இது, உள்ளாட்சியில் 50 சதவிகித இட ஒதுக்கீடு. இந்த மகத்தான சாதனை தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் கருவுற்ற நாள் முதல் பிரசவம் முடிந்து வீடு திரும்பும் வரை நிதி உதவி, பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பான தனி அறைகள் கட்டப்பட்டது என்றார். இளைஞர்கள், இளம்பெண்களை வேலை வாய்ப்புகளை பெற்ற தமிழகத்தை தலைநிமிரச்செய்வதுதான் அதிமுகவின் குறிக்கோள் என்றும் கூறினார் ஜெயலலிதா. அதிமுக அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் உரையை கேட்க வசதியாக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பல்வேறு இடங்களில் பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளிலும் நவீன பிரச்சார வேன்கள் உள்ளன. இந்த வேன்களில் பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஜெயலலிதாவின் எழுச்சி உரை இந்த திரையில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பேச்சை 21 தொகுதிகளிலும் மக்கள் ஒரே நேரத்தில் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தை நேரடியாக இணையதளங்களிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக