ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மண்டபம் அகதி முகாமில் பெண் தற்கொலை...சசிகலா (41).

பனைக்குளம், இலங்கை திரிகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகல £(வயது 41). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் தமிழகத்திற்கு அகதியாக வந்தார். இவரது கணவர் புவனேசுவரன் மண்டபம் பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மதிமிதா(12) என்ற மகளும், ரஞ்சன்(4) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகலா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மண்டபம் முகாம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக