ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சிகிச்சை அளிக்க மறுப்பு: குழந்தை உயிரிழந்ததால் மருத்துவர் சுட்டுக் கொலை உத்தரகாண்ட்

உத்தராகண்ட் மாநிலத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தை உயிரிழந்ததை அடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஜஸ்பூரை சேர்ந்தவர் மாணிக் ரத்தி. இவரது ஒன்றரை வயது மகனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். குழந்தைகள் நல மருத்துவரான சிங், சிகிச்சை அளித்தார். உடல் நிலை தேறியதை அடுத்து குழந்தையை மாணிக் ரத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18 இரவு குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், அருகில் உள்ள பல மருத்து வர்களிடம் மாணிக் ரத்தி காண்பித் துள்ளார். அவர்கள் அனைவரும் கைவிரித்ததால், கடைசியில் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் சிங்கின் வீட்டு கதவை தட்டியுள்ளார். அவரும் குழந்தையை பரிசோதித்துவிட்டு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால் மாணிக் ரத்தி மனம் உடைந்த வேளையில், மறுநாள் ஏப்ரல் 19 அன்று குழந்தை பரிதாப மாக உயிரிழந்தது.
இதனால் கடும் ஆவேசம் அடைந்த மாணிக் ரத்தி, ஏப்ரல் 20-ம் தேதி தனது உறவினரான சிவம் தியாகி என்பவருடன் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு பணியில் இருந்த மருத்துவர் சிங்கை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் மருத்துவர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார், மாணிக் ரத்தி மற்றும் சிவம் தியாகியை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.
கைதான மாணிக் ரத்தி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.   tamil.thehindu.com/i

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக