ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

மாற்றத்தை கொண்டுவரவேண்டும்; ஏமாற்றத்தை கொண்டுவந்துவிட வேண்டாம் : கலைஞர் பேச்சு

சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் திமுக தலைவர் கலைஞர். சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் - அன்பரசன், வேளச்சேரி -வாகை சந்திரசேகர், விருகம்பாக்கம் - தனசேகரன், சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ் திமுக வேட்பாளர்கள் 5 பேரை அறிமுகம் செய்துவைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘’சென்னையில் வெள்ளம் வந்தபோது அரசு கவலைப்படவில்லை.
செம்பரம்பாக்கம் நீர்த்துறப்பு குறித்து எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகாலமாக மக்கள் அளவற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் எதேச்சதிகாரத்தை எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக்கொண்டிருப்பது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும். திமுக சார்பில் போட்டியிடும் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். மக்களுக்காக உழைக்கு திமுக வேட்பாளர் களுக்கு வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெருவார்கள். சக்தியற்றவனாக இருக்கின்றேன் நான்; இந்த தேர்தலில் அந்த சக்தியை எனக்குத் தாருங்கள். மாற்றத்தை கொண்டுவர அனைவரும் பாடுபடவேண்டும். ஏமாற்றத்தை கொண்டுவந்துவிட வேண்டாம்’’ என்று குறிப்பிட்டார். நக்கீரன்.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக