ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

கேரளா கோவில் தீவிபத்து 84 பேர் பலி.. 200 க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம்... கொல்லம் பரவூர்...


கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிச்கி 84 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பரவூர் கோவில். இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது.அப்போது, பட்டாசு வெடித்ததாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.இந்த பயங்கர விபத்தில் 84 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 200 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் சுவர் இடந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக