ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

திமுக மீது கட்டுகதை பித்தலாட்டங்களை கட்டவிழ்த்து விடும் ஆந்தை ரிப்போர்டர் என்கின்ற பார்பன இணையத்தளம்

பழைய நாஞ்சில் பிடி சாமி பாணியில் மர்மகதைகளை அவிழ்த்து விட ஆரம்பித்துள்ளது இந்த பார்பன பரிவாரம். இவர்கள் இந்தமாதிரி கயிறு திரிப்பதில் வல்லவர்கள் . குலதொழிலாச்சே. ..அதாவது  திரிப்பதில் வல்லவர்களாச்சே. பார்பனர்கள் எந்த அளவு கீழே இறங்குவார்கள் என்பதற்கு இது ஒரு சிறு சாம்பிள்தான் . 2 G கதையை எப்படி எல்லாம் பலூன் ஊதினார்கள் ? JNU கன்னையாகுமாரின் பேச்சு விடியோவை எப்படி எல்லாம் ரீமிக்ஸ் செய்து சிறையிலும் அடைத்தார்கள் .  இனி படியுங்கள் அவர்களின் கதை வசனங்களை:  
குறுக்கு வழி பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்த தி மு க -வின் பாம்பே ஏஜெண்ட் டீம்!
dmk apr 8வரவிருக்கும் தமிழ்நாடு தேர்தல் பிரசார யுத்தி குயுக்தியான – குறுக்குப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது திராவிட முன்னேற்ற கழகத்துக்காக மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் சமூக வலைத்தளங்கள் மற்றும் தங்களுக்காக தனியாக வலைப் பக்கங்களை எழுதுவோரை குறிவைத்து இறங்கியுள்ளது.அவர்களின் ஒரு திட்டமாக அதிமுக அரசின் குறைகளை வலைத்தளங்களில் பரப்புவதற்கு நாள்தோறும் ரூ. 300 வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


அதாவது தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் 30 வயதுக்கும் குறைவானர்கள். அதிலும் பலர், முதல்முறையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத் தளங்களில் தீவிரமாக இயங்குபவர்கள். டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், தங்களுக்காக தனியாக வலைப்பக்கங்கங்களையும் உருவாக்கி, தங்களது கருத்துகளையும் எழுதி வருகின்ற னர். இவர்களை குறிவைத்து மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பிராண்ட் மோனாசிஸ்’ நிறுவனம் ஒரு இமெயில் அனுப்பியுள்ளது.
‘உங்களது ஒவ்வொரு பதிவுக்கும் பணம்’ என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், நாள்தோறும் அவர்கள் தரும் அதிமுக அரசின் தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும்.அவர்கள் தரும் அதே செய்தியை அப்படியே நகல் செய்து (Copy) , சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டுமாம் (Paste). இதற்காக நாள்தோறும் ரூ. 300 வரை வழங்கப்படும் என்றும், வாரந்தோறும் பணம் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.அவர்கள் குறிப்பிட்ட தொலைபேசியை தொடர்பு கொண்டால் இன்னும் அதிர்ச்சி ரகம்! ஆமாம். இந்தப் பணிக்காக 10 பேரை அழைத்து வந்தால், அழைத்து வருபவருக்கான சம்மானம் இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வலைப் பதிவர் ஒருவர், சமூக வலைத்தளப் பதிவு என்பதே ஒருவரது தனிப் பட்ட எண்ணங்களின் வெளிப்பாடுதான். சமூக வலைத்தளங்களில் ஒருவரை பின்தொடருபவர்கள் அவரது கருத்துகள், எண்ணங்களின் அடிப்படையிலேயே தொடருகிறார்கள்.ஆனால், தனியார் நிறுவனத்தின் இந்த முயற்சி தனிப்பட்ட எண்ணங்களை தகர்ப்பதுபோல் உள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டால், நம்மை தொடருபவர்களை ஏமாற்றுவது போல் இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக