ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

வைகோ அதிமுக ஏஜெண்ட்....டீல் 1500 கோடி....பிரேமலதாவுக்கும் பங்கு.....அணுகுண்டு வீசிய சந்திரகுமார்

சென்னை: அதிமுகவின் ரகசிய ஏஜெண்ட்தான் வைகோ என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்ததில் வைகோவிற்கு நிறைய ஆதாயம் உள்ளது என்று தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏவும், மாஜி கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 12 நாட்கள் உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தொகுதி பங்கீடு என பரபரப்பாக உள்ளது அரசியல் களம். மூன்றாவது பெரிய கட்சியாக கருதப்படும் தேமுதிகவிலோ புயல் மையம் கொண்டுள்ளது. மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியின் மூன்று எம்.எல்.ஏ-க்களும் ஐந்து மாவட்டச் செயலாளர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பு, பரபரப்பு குற்றச்சாட்டுகள் என்று முன் வைக்கும் சந்திரகுமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான் இத்தனைக்கும் காரணம் என்று வெடிகுண்டை வீசுகிறார்.

வைகோ ஏஜெண்ட் ரூ. 1500 கோடியை ஜெயலலிதாவிடம் வாங்கிக்கொண்டு அதிமுகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார் வைகோ என்று குற்றம் சாட்டும் சந்திரகுமார், இந்த பணத்தில் பிரேமலதாவிற்கு பங்கு கிடைத்துள்ளது என்று அடுத்த குண்டை வீசுகிறார். சில தினங்களுக்கு முன்பு வரை அண்ணியார் அண்ணியார் என்று மரியாதையாக அழைத்த சந்திரகுமார்தான், தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சந்திரகுமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
திமுக கூட்டணி தி.மு.கவுடன் பேச்சு நடக்கிறது என்றுதான் எங்களிடம் சில மாதங்களாக சொல்லி வந்தார்கள். தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் வீட்டிலும் சந்திப்பு நடந்தது. அதன்பின் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இப்போது தி,மு.கவுடன் கூட்டணி இல்லை என்று சொல்விட்டார்கள்.
தொண்டர்கள் ஏமாற்றம் காஞ்சி மாநாட்டில் திமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று கூறினார்கள். தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால் உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பிடிக்கலாம் என்ற ஆசையில் இருந்த லட்சக்கணக்கான தொண்டர்களையும் இவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்.
அடகு வைத்த பிரேமலதா மக்கள் நலக்கூட்டணியுடன் ஏன் தேமுதிக கூட்டணி வைத்தது என்று இன்று வரைக்கும் யாரிடமும் கூறவில்லை. தேமுதிகவை கட்சியை அடகு வைத்து விட்டார் பிரேமலதா.
பணம் வாங்கிய பிரேமலதா அதிமுகவிற்கும் தேமுதிகவிற்கும் இடையே பண பரிவர்த்தனை நடந்துள்ளது. கட்சியை விட குடும்ப நலன் முக்கியமாகப் போய் விட்டது. அவர்களின் குடும்பத்திற்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது.
அதிமுக உடன் கூட்டணி மண்டபத்தை திமுக இடித்து விட்டது என்பதான் பிரேமலதாவின் கவலை. குடிகாரன் என்று கூறிய கட்சியுடனேயே கூட்டணி வைத்து விட்டோம் ஊழல் எதிர்ப்பு லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்போம் என்று கூறி கட்சி தொடங்கினோம். ஆனால் அதிமுக ஆட்சியில் கூட்டணி வைத்தோம்
மீண்டும் அதிமுக ஆட்சி கடந்த 5 ஆண்டு காலமாக அதிமுகவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது தேமுதிகவின் முடிவினால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது
விளக்கம் தரவேண்டும் நமக்கு நாமேவில் ஸ்டாலின் உறுதி கொடுத்தார். இனிமேல் பழைய தவறுகள் நடைபெறாது என்று கூறியுள்ளார். தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் பலரும் திமுக உடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்து விட்டது. அது ஏன் என்று விளக்கம் அளிக்க வேண்டும்.
மறுபரிசீலனை செய்வார் கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் தவறான முடிவை எடுத்து விட்டோம் என்று வருந்தி அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி அவர் திமுகவுடன் கூட்டணி வைப்பதாக இருப்பதால் ஊடகங்கள் முன்னிலையில் விஜயகாந்த் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயார். இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

Read more at:/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக