ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

"அம்மாவின் மரண தேசம்",...தோழர் கோவன் கைதை ஒட்டி வினவு தளத்தின் இரண்டாவது ஆவணப்படம்


1-victor - Chennai,இந்தியா இதைவிட கேவலமாக மக்களை யாராலும் நடத்தமுடியாது. அதிகாரமே சாராயம் காய்ச்சி விற்றது . மறுத்த குரல் வளைகளை தேசிய பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை சட்டம் என பாய்ந்த்தது. இப்போது ஓட்டுக்காக மக்களிடம் நெஞ்சை உயர்த்தி பிச்சை ...
2- தமிழன் - chennai,இந்தியா
இந்த ஐந்து வருடத்தில் நடக்காதது இனி நடக்க போகுதா தமிழனை கோமாளி என்று ஜெயலலிதா நினைத்து கொண்டு இருக்கிறார் யாரும் தயவு செய்து vote போடதிங்க
3- சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
, மாணவர்கள் காவலர்களிடம் மதுவிலக்கு போராட்டத்திற்காக அடிவாங்கியபோது, சசிபெருமாள் மதுவிலக்கிற்காக உயிரை விட்டபோது வராத ஞானோதயம் தேர்தல் என்றவுடன் வந்துவிட்டதே.. அடடே.. இந்த 5 வருசமா மதுவிலக்கு பத்தி மூச்சு கூட விடல. தேர்தல் வந்ததும் ஞானோதயம் வந்துருச்சா? இந்த வாக்குறுதிய தண்ணீலதான் எழுதி வெக்கணும்.


4-Amal Anandan - chennai,இந்தியா; இதுக்கு பேரு தான் சாத்தான் வேதம் ஓதுறது. எத்தனை போராட்டங்கள் மதுவிற்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்க மட்டும் தெரிந்தவர் இப்போ மது விலக்கை அமுல்படுத்துவாராம். வெட்ககேடு. மக்கள் மதிகெட்டவர்களாய் இருந்தால் இது போன்ற அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான். இதுவரை நல்ல ஓய்வில் இருந்தார். இனி ஆட்சியை பிடிக்கவேண்டுமே அயராது பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
5- Raja Selvan,TVM - Tiruvannamalai,இந்தியா இதனை நாள் உண்மையிலேயே தூங்கி கொண்டு இருந்தாரா ...வோட்டு வாங்கறதுக்காக இன்னைக்கு மதுவிலக்கு என்று பேசுகிறாரே, ......இதுக்கும் அதிமுக சொம்புகள் வந்து பெருமையாக அடிமை பாட்டு பாடும் ...மக்களே ஏமாந்துடாதிங்க. இந்தம்மா  பெரிய கேடி
6- N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா அட இது என்னங்க புத்சா இருக்கு .....நாத்தம், பன்னீர் சொம்பு ஏன் அம்மே கூட சட்டமன்றதிலேயே மது விலக்கு அமல்படுத்த முடியாதுன்னு சொன்னாங்க.... உடனே அதுக்கு ஆளும் கட்சி அனுதாப வாசகர்கள் கூட ஆதரவா கருத்து எழுதினாங்களே... ஐயோ பாவம் ...அவிங்க மூஞ்சில எல்லாம் பலுபு பிரகாசமா எரியும் ....
7- abu lukmaan - trichy,இந்தியா அம்மையார் இப்போ சொல்லி புண்ணியமில்லை . இதை 1 வருடம் முன்பு சொல்லி செயல்படுத்தி இருந்தால் இப்போது மக்கள் நம்புவார்கள் . இதே தின மலரில் பலமுறை படிப்படியாக மதுவை குறைக்க சொல்லி எழுதி இருந்தேன். நான் ஒரு பொருட்டு அல்ல . ஆனால் எத்தனையோ கட்சிகள் சொல்லி இருந்தன . யாருடைய பேச்சையும் கேக்க வில்லை . சோ சொன்னாரா என்று தெரிய வில்லை .
தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக