திங்கள், 11 ஏப்ரல், 2016

உக்கிரேனில் 2 இந்திய மாணவர்கள் குத்தி கொலை...

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்துவந்த 2 மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது உழ்கோரோட் மருத்துவ கல்லூரி. இந்த கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அதன்படி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்களும் அங்கு படித்து வருகின்றனர். இவர்களுள் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஷைன்டில்யா, காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த அன்குர் சிங் ஆகியோரை உக்ரைன் நாட்டை சேர்ந்த சில மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அத்துடன், கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த இந்திய மருத்துவ மாணவரான இந்திரஜீத் சிங் சவுகான் என்ற மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஆக்ரா நகரச் சேர்ந்தவர் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாணவர்களை கொலை செய்தது யார் என்ன நோக்கத்திற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகினறது. இந்நிலையில், உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் பதற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுவெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக