திங்கள், 11 ஏப்ரல், 2016

தமாகா டமால் ! S.R.பாலசுப்ரமணியம் ஜெயாவின் அழைப்புக்கு காத்திருக்கிறார்...பீட்டர் அல்போன்ஸ்...ஏராளமானோர் காங்கிரசில் ஐக்கியம்

சென்னை: சட்டசபை தேர்தலில் ஒரே மேடையில் கருணாநிதி, சோனியா, ராகுல், ஸ்டாலின் பிரசாரம் செய்வர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முனிரத்தினம் மாநில செயலாளர் சுகுமார் தலைமையில் ஏராளமான தமாகாவினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். Sonia, Rahul to address with Karunanidhi, Stalin, says Elangovan பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: த.மா.கா.வில் இருந்து வாசனை தவிர எல்லோரும் காங் கிரசுக்கு வரவேண்டும். வாசன் மீது மூப்பனார் மகன் என்ற ரீதியில் எனக்கு பாசம் உண்டு. ஆனால் எப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அப்போதே துடித்துப் போனேன். பாவிகளுடன் பேசியவர்களோடு இருக்கலாமா? எல்லோரும் வாருங்கள்.
தேர்தல் முடிவில் இருந்து காங்கிரசுக்கு புதிய அத்தியாயம் தொடங்கும். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஜெயலலிதாவுக்காக காத்து இருக்கிறார். அவரை விட்டு விட்டோம். பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன், கார்வேந்தன் உள்பட பலர் வர இருக்கிறார்கள். தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிக பிரமாண்டமானது. கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது. மது விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை பா.ம.க.வை பார்த்து காப்பி அடித்தாக சொல்கிறார்கள். ஜெராக்ஸ் காபி எடுப்பதில் பா.ம.க.வுக்கு அதிக நம்பிக்கை உண்டு. ஒபாமா போலவே போஸ்டர் போட்டவர்கள் அவர்கள். எனவே எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். 
முதல்வர் ஜெயலலிதாவும் மது விலக்கை படிப்படியாக கொண்டு வருவேன் என்கிறார். ஒரு படி கூட ஏற முடியாதவரால் எப்படி படிப்படியாக அமல்படுத்த முடியும். ஆட்சியில் இருந்தபோது செய்ய மறுத்தையும், மறந்ததையும், இனிவர மாட்டோம் என்று தெரிந்து விட்டதால் மோடியைப் போல் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுப் பார்க் கிறார். சோனியா, ராகுல் ஆகியோர் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வருவார்கள். ஒரே மேடையில் கருணாநிதி, சோனியா, ராகுல், ஸ்டாலின், முஸ்லிம் லீக் தலைவர்கள், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகிய அனைவரும் ஒரே மேடையில் பேசுவார்கள். இவ்வாறு இளங்கோவன் கூறினார்

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக