ஞாயிறு, 27 மார்ச், 2016

விஜயகாந்த் சிங்கப்பூர் பயண மர்மம் ( Health and ?00000000000...?)

சென்னை: தேமுதிக. தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றதாகவும், ஆனால் அவ்வாறு செல்லவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அவர் இன்று சிங்கப்பூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி உருவான நாள் முதல் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதன் பின்னர் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. வேறு நிகழ்ச்சி எதுவிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் சிங்கப்பூரில் இருப்பதாகவும், அங்கு அவருக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்யவிருப்பதாகவும் செய்தி பரவியது . ஆனால் அவரது மைத்துனர் சுதீஷ் அளித்த விளக்கத்தில் ; விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றிருப்பதாக செய்தி வெளியானது தவறானது.  அப்படியானா எதுதாங்க உண்மை? எல்லாமே உண்மையோ ?  கிட்னி பிரச்சனை, அதிமுகவிடம் பேரம் பேசிய கொடுக்கல் வாங்கல் செட்டில்மென்ட்,  வைக்கோவின் 500 குற்றச்சாட்டு வழக்கு சாட்சியம் அளிக்க பயந்து ஓட்டம்?   சாரி சார் உங்கமேல நிறைய சந்தேகம்வருது ....
ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையில் விஜயகாந்த் இன்று இரவு 11 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருப்பதாக மாலை 4 மணியளவில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் யாரும் இதனை உறுதி செய்ய முடியவில்லை.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக