ஞாயிறு, 27 மார்ச், 2016

பாலிமர் டிவி கண்ணன் விளக்கம்...வைகோ வெளியேற்ற விபரம்

தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ரூ.500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருந்தார்.  இது தொடர்பாக வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். நாங்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் திமுக இதை திரும்ப பெற்றுவிடவேண்டும் என்று ஆவேசப்பட்டிருந்தார். இந்த நிலையில் பாலிமர் செய்திதொலைக்காட்சிக்கு வைகோ பேட்டி அளித்தபோது,  ’’தி.மு.க தரப்பில் ரூ.500 கோடி கொடுக்க முன்வந்தார்கள்...80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்கிறது உங்களது குற்றச்சாட்டு. அது தவறு. அதுமட்டுமல்ல அதிமுகவின் பி டீமாக செயல்படுகிற வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு ரூ1,500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது.......’’ என்று செய்தியாளர் கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி சென்றார்.


நான் அடுத்து என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளுங்க கேளுங்க என்று செய்தியாளர்கள் சொல்லச் சொல்ல வைகோ அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அறையை விட்டு வெளி யேறினார்.

இது குறித்து பாலிமர் தொலைக்காட்சியின்<;நெறியாளர் கண்ணன் அளித்துள்ள விளக்கம்: ‘’வைகோ அவர்களுடன் ஒரு மணி நேர நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆனால் 15 நிமிடங்களோடு நேர்காணலை நிறைவு செய்ய வேண்டிய நிலை..

காரணம் நீங்கள் அறிந்ததுதான்.;பாலிமர் தொலைக்காட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. அனைத்து தலைவர்களையும் சமமாக மதிக்கிறது.குறிப்பா வைகோ அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் மதிக்கின்ற தலைவர்களில் அவரும் ஒருவர்.  வைகோ அவர்களை களங்கப்படுத்த வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். எனது கேள்வியை முழுமையாக கேட்பதற்கு முன்னதாகவே அவர் கோபப்பட்டு எழுந்தது துரதிஷ்டவசமானது.

சமூக வலைத்தளங்களையும் பத்திரிகைகளையும் மேற்கோள் காட்டி அவர் ஒரு குற்றசாட்டை முன் வைக்கும் போது அதே சமூக வலைத்தளங்களில் வைகோ மீது வந்த குற்றச்சாட்டுக்களை அவரிடம் எடுத்து சொல்லும் நோக்கிலேயே நான் கேள்விகளை முன் வைத்தேன். மதிப்புக்குறிய வைகோ அவர்கள் பணம் பெற்றுவிட்டதாக நான் குற்றசாட்டை முன் வைக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில்  உங்கள் மீதும் ஒரு குற்றசாட்டு இருக்கிறதே அப்படி இருக்கும்போது சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான் எனது கேள்வியாக இருந்தது.

 இந்தக் கேள்வி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே வைகோ அவர்கள் எழுந்து சென்றுவிட்டார். இது தான் நடந்தது. மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற விசயங்களை தொகுத்து சம்பந்தபட்ட வர்களிடம் கேள்விகளை முன் வைக்கிறோம். ஒரு ஊடகவியலாலனாக நானும் அதைத்தான் செய்திருக்கின்றேன்.&gt

பாலிமர் நிர்வாகத்தைப் பொருத்தமட்டில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. நடு நிலையோடு செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். பாலிமர் அந்த பாதையில் தொடர்ந்து பயணிக்கும்.’  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக