வெள்ளி, 18 மார்ச், 2016

அத்தனை கூட்டணிகளாலும் கழற்றி விடப்பட்ட தே மு தி க ! எல்லா கதவும் அடிச்சாச்சு...சு.சாமி?

இனி எங்களுக்கு விஜயகாந்த் தேவையில்லை என மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது.  மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த கூட்டணியாக வளர்ந்துவிட்டோம்.  இனி  விஜயகாந்த் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அதுபற்றி நாங்கள் கவலைப்படபோவதில்லை என  வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 தே.மு.தி.க.,வில் நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேர் குழு, கூட்டணி பேச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற திடீர் சந்தேகத்தால், அவர்களை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துள்ள அக்கட்சி தலைவர் விஜயகாந்த், கட்சியினர் நெருக்கடியாலும் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக, தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி மற்றும், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை, விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர், தொடர்ச்சியாக சந்தித்து பேசி வந்தனர். தே.மு.தி.க., தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாமல், கட்சி தலைவர்கள் அனைவரும் தடுமாறினர். நந்தவனத்தில் ஒரு ஆண்டி...அவன்  கூத்தாடி கூத்தாடி போட்டுடைந்தாண்டி... ஓவர் ரவுசி காட்டி காட்டி டவுசர் பீஞ்சிடுச்சு...    

தனித்து போட்டி:இதனால் ஒரு கட்டத்தில், அனைவரும், தே.மு.தி.க.,வை, 'கழற்றி' விட்டு விட, வேறு வழியின்றி, சென்னை, ராயப்பேட்டையில் நடந்த கட்சியின் மகளிர் அணி பொதுக் கூட்டத்தில், 'வரும் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடும்' என, அறிவிப்பு வெளியிட்டார்.

இதனால், கட்சியினர் அனைவரும், விஜயகாந்த் மீது கடும் அதிருப்தியில் இருக்க, அடுத்த கட்டமாக, சிறிய கட்சிகளை இணைத்து தன் தலைமையில், தமிழகத்தில் புதிய கூட்டணி ஒன்றைஏற்படுத்த, அவர் முயற்சித்தார்.இதற்காக, மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா., மட்டுமின்றி, 15 சிறிய கட்சிகளை இணைத்து கூட்டணியை உருவாக்க, தே.மு.தி.க., தலைமை வியூகம் வகுத்தது.
ஏழு பேர் குழு: கட்சி வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சை கவனிப்பதற்காக, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் தலைமையில்,
ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்படுவதாக வும், விஜயகாந்த் அறிவித்தார். இந்த குழுவில், அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் பார்த்த சாரதி, சந்திர குமார், இளங்கோவன் மட்டுமின்றி, ஆசிரியர் பட்டதாரி அணிச் செயலர் ரவீந்திரன், சேலம் வடக்கு மாவட்ட செயலர் மோகன்ராஜ், விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றனர்.

இக்குழுவினர் பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்புக் கொண்டு, அவர்களை, தே.மு.தி.க., கூட்டணிக்கு அழைத்து வருமாறு, விஜய காந்த்உத்தரவிட்டார்.
அதை ஏற்று, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள, ம.தி.மு.க., - -வி.சி.,- - இ.கம்யூ., - -மா.கம்யூ., தலைவர்கள், த.மா.கா., தலைவர் வாசன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஐ.ஜே.கே., தலைவர் பச்சமுத்து, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலரையும், ஏழு பேர் குழுவினர், ரகசியமாக தொடர்பு கொண்டு பேசினர். தே.மு.தி.க., கூட்டணியில் சேருவதற்கு, விஜயகாந்த் அழைப்பதாக, அவர்களிடம் கூறியுள்ளனர். அதற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், 'எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வரட்டும்' எனக் கூறி கைவிரித்து விட்டனர். முன்னேற்றம் இல்லை:மற்ற கட்சி தலைவர்கள், 'நீங்கள் உங்கள் தலைவரை, எங்கள் கட்சி அலுவலகம் வந்து, முறைப்படி கூட்டணிக்கு அழைக்க சொல்லுங்கள். அதன் பின், கூட்டணி குறித்து யோசிக்கலாம்' என்று கூறியுள்ளனர்.

கூட்டணி பேச்சை, ஒருவாரமாக நடத்திய நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், ஏழு பேர் அடங்கிய குழுவினர், 'இதெல்லாம் சரிப்பட்டு வராது' என, தங்கள் சொந்த வேலைகளை கவனிக்க துவங்கிவிட்டனர்.
விளக்கம் கேட்கும்விஜயகாந்த்:மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும், மற்ற கட்சிகளின் தலைவர்களும், என் தலைமையை ஏற்பதாக, ஏற்கனவே பலமுறை கூறி வந்தனரே... இப்போது, அவர்கள் வரத் தயங்குவது ஏன்...' என்ற சந்தேகம், விஜயகாந்திற்கு எழுந்திருக்கிறது. இதையடுத்து, ஏழு பேர் குழுவிடம், விஜயகாந்த் இதுகுறித்து, விளக்கம் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளிக்க முடியாமல், ஏழு பேர் குழுவினர் திணறியுள்ளனர். ஏழு பேர் குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேர வேண்டும் என கருத்து தெரிவித்தவர்கள். கூட்டணி பேச்சில் அவர்கள் ஆர்வம் காட்டாதது தான், மற்ற கட்சிகளின் தலைவர்கள் தன்னை நாடி வராததற்கு காரணம் என்று, விஜயகாந்த் கணக்கு போட துவங்கி யுள்ளார்.

எனவே, ஏழு பேர் குழுவில் கூடுதலாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும், பலரை நீக்குவது குறித்தும், விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், குழுவினர் யாரும் இனி கூட்டணி குறித்து பேச வேண்டாம் என உத்தர விட்டுள்ள விஜயகாந்த், தனக்கு தெரிந்த கட்சி தலைவர்கள் சிலருக்கு, தானே போன் போட்டு பேசுகிறாராம். இருந்தும், அவர்கள் யாரும் விஜயகாந்துடன் கூட்டணி சேர பிடிகொடுக்காததால், விஜயகாந்த் கடும் விரக்தியில் உள்ளாராம்.
அழுத்தம் அதிகரிப்பு:இதனிடையே, சரியான கூட்டணி வாய்ப்பு அமையாததால், தேர்தலில் போட்டியிட விரும்பி ஏற்கனவே கட்சி தலைமையிடம் பணம் கட்டிய, கட்சியின் தொண்டர்கள் பலரும், பணத்தை திரும்பக் கேட்டு நச்சரிக்கும் அழுத்தம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கட்சி அலுவலகம் வருவதையும் விஜயகாந்த் முழுமையாக தவிர்த்து விட்டார் என, கட்சி வட்டாரங்கள் கூறின.

--நமது சிறப்பு நிருபர் --  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக