தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்' என, தென் சென்னை மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அன்பரசன் உட்பட, ரசிகர்கள் சிலர், நேற்று விருப்ப மனுக்கள் தாக்கல்
செய்துள்ளனர். உதயநிதி பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யும் முன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினிடம், அவரது ரசிகர்கள் அனுமதி கேட்டு பெற்றுள்ளனர். இதே போல, உதயநிதி ரசிகர் மன்ற மாநில
தலைவரும், இளைஞரணியின் மாநில நிர்வாகியுமான மகேஷ் பொய்யாமொழி, திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என, இளைஞரணிநிர்வாகிகள் விருப்ப மனுக்கள் கொடுத்துஉள்ளனர்.
சொந்த காசில பிளேன் டீ குடித்துவிட்டு
பிழைக்க தெரியாதவனாக இருக்கும் அடிமட்ட தொண்டர்கள் அதிக அளவில்
திமுகவுக்குதான் உள்ளனர் அவர்களின் மகிழ்சிக்காக இதுவும் வேணும் இன்னமும்
வேணும்?
இதற்கிடையில், உதய நிதி நடிகர் நட்சத்திரம் என்பதால், அவரை தமிழகம் முழுவதும், தி.மு.க., சார்பில் பிரசாரம் செய்ய வைக்கவும் ஏற்பாடுகள்நடந்து வருகின்றன. சவுண்டையா ஐ.ஏ.எஸ்., 'டாஸ்மாக்' நிறுவன நிர்வாக இயக்குனராக பணியாற்றி, சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சவுண்டையா, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் -:. தினமலர்.com

சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குரம்யா