திங்கள், 14 மார்ச், 2016

கலப்புத்திருமண ஜோடிக்கு சரமாரி வெட்டு ... இளைஞர் மரணம்..மனைவி ஆபத்தில்

கலப்புத்திருமணம் செய்த காதல் ஜோடிக்கு நடுரோட்டில் சரமாரி வெட்டு இளைஞர் மரணம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22வயது இளைஞர் சங்கர்.  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்.  இவர் பழனியைச்சேர்ந்த கவுசல்யா என்ற வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்இந்த நிலையில்
இன்று பிற்பகல் 3 மணி அளவில் உடுமலை பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இந்த காதல் தம்பதியை, பைக்கில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.  பலத்த காயம் அடைந்த சங்கரும், கவுசல்யாவும் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார்.  தலையில் வெட்டுக்காயத்துடன் கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்தில் பைக்கில் 3 பேர் அரிவாளுடன் தப்பிச்செல்லும் காட்சியை  பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.  இந்த புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக