வெள்ளி, 4 மார்ச், 2016

பாஜக இன்னும் நம்பிக்கை இழக்கலை..தேமுதிக +பாமக கூட்டணி முயற்சி கூட இன்னும் வாய்ப்பு இருக்கிறது?

விஜயகாந்தையும், பா.ம.க.,வையும் வளைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் தக்கவைக்க டில்லி பா.ஜ., தலைமை புது பார்முலா வகுத்துக் கொடுத்து, கடைசி கட்ட முயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி, 'விஜயகாந்தும், அன்புமணியும் ஆளுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வராக பதவி வகிக்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே அங்கிட்டு 120 சீ  வாங்கிட்டாராம் ! இவங்க அதுக்கும்மேலே  சூட்கேஸ் கொடுகிறதா சொல்றாங்களாம்...ஆனா ரொம்பவும் லேட்டாயுடுத்து என்ன பண்றது? இன்னும் ஒரு குவாட்டர் அடியுங்க சரியாயிடும்
</>கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் தே.மு.தி.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. வரும் சட்டசபை தேர்தலிலும் இதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க, பா.ஜ., விரும்புகிறது. இதற்காக சில கட்சிகளுடன் < பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தே.மு.தி.க.,வும், - பா.ம.க.,வும் முரண்டுபிடிப்பதால் கூட்டணி முடிவடை யாமல் இழுபறியாக உள்ளது. இதற்காக பா.ஜ., தரப்பில் பல தலைவர்கள், விஜயகாந்தை பலமுறை சந்தித்து பேசி விட்டனர். கடைசியாக கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஜாவடேகரும், விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்த் தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்ட தாககூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை வந்த ஜாவடே கர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை சென்னையை அடுத்துள்ள பெருங்க ளத்துாரில் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது பா.ஜ., மேலிடம் வகுத்துக் கொடுத்த பார்முலா பற்றிய தகவலை ஜாவடேகர் கூறியுள்ளார்.அதன்பின் அந்தத் தகவல் பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர் மூலம் பா.ம.க., தரப்புக்கும் சொல்லப்பட்டு உள்ளது.இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

டில்லி பா.ஜ., தலைமை வகுத்துக் கொடுத்துள்ள பார்முலாபடி பா.ஜ., தலைமையில் தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் ஜாதி அமைப்புகள் ஒருங் கிணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும்.சட்டசபை தேர்தலில் இந்த அணி வெற்றி பெற்றால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு விஜயகாந்த் அல்லது அன்புமணி இருவரில் ஒருவர் முதல்வராக இருப்பார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு, மற்றவர் முதல்வராக இருப்பார். இப்படி அமையும் அமைச்சரவையில் பா.ஜ., கூட்டணியில் இடம் பெறும்; அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர் களும் இடம் பெறுவர்.

அத்துடன் தே.மு.தி.க., மற்றும் பா.ம.க.,வை சேர்ந்த தலா ஒருவருக்கு மத்திய அமைச்ச ரவை யில் இடம் அளிக்கப்படும். இந்த திட்டங்கள் பற்றி இரண்டு தரப்பிலும் தெரி விக்கப்பட்டு விட்டது. ஜாவடேகர், விஜய காந்திடம் நேரடியாகவே சொல்லி விட்டார். பா.ம.க.,வுக்கு பா.ஜ., நிர்வாகி ஒருவர் மூலம் சொல்லப்பட்டு விட்டது.

இருப்பினும் பா.ஜ.,வின் புதிய பார்முலா தொடர்பாக இரு கட்சிகள் தரப்பிலும் உடனடி யாக பதில் தரப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவை சொல்கிறோம் என தெரிவித்துள்ள னர்.இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக