வெள்ளி, 4 மார்ச், 2016

63 வேண்டாம் 59 போதும் என்றார் விஜயகாந்த்...ஜோதிடரின் ஆலோசனையாம்

விஜயகாந்  திமுக பேச்சுவார்த்தையின் போது கலாநிதியிடம் விஜயகாந்த் 63 தொகுதிகள் ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டதாகவும், அதை கண்டிப்பாக நான் பெற்றுத் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்த கலாநிதி, இந்த தகவலை கலைஞரிடம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.இவ்வளவு தொகுதி எப்படி கொடுக்க முடியும் என்று கருணாநிதி கேட்டுள்ளார். தேமுதிக நம் பக்கம் வர வேண்டுமென்றால் விஜயகாந்த் கேட்ட தொகுதிகளை கொடுத்துதான் ஆக வேண்டும் என்று கலாநிதி கூறியுள்ளார். ஸ்டாலினும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, வேறு வழியில்லாமல் கருணாநிதியும் ஒத்துக்கொண்டாராம்.இப்படியிருக்க, விஜயகாந்த் தரப்பிலிருந்து இன்று ஒருவர் கலைஞரை சந்தித்துள்ளார். அப்போது அவர் ஜோதிடரின் ஆலோசனைப்படி, ராசியில்லாத காரணத்தால், விஜயகாந்துக்கு  63 தொகுதிகள் வேண்டாம் என்றும்,  அதிலிருந்து 4 தொகுதிகள் குறைத்து 59 தொகுதிகள் கொடுத்தால் போதும் என்றும் கூறப்பட்டதாம்.
ஏனெனின் அதில் விஜயகாந்தின் ராசி எண் 5 வருகிறதாம்.இதுவரை தன்னிடம் தேர்தல் கூட்டணி கட்சிகள் அதிகமான தொகுதிகளை கேட்டுத்தான் பழக்கம். இது என்ன புதிதாக இருக்கிறது என்று திமுக தரப்பு இன்ப அதிர்ச்சி அடைந்ததாம் webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக