வெள்ளி, 4 மார்ச், 2016

ஆந்திரா : சிறுவன்(15) சிறுமியை (8) பாலியல் பலாத்காரம் செய்தான்

Visakhapatnam: A seven-year-old girl was allegedly raped by a 15-year-old boy at Yeguvapeta in Bheemunipatnam town in the district, police ...
ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் ஏலூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் துணிக்கடையில் வேலை செய்கிறான். இவன் வீட்டிற்கு அருகில்  3ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி இருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவளை வீட்டிலேயே விட்டு விட்டு, அவளின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த சிறுவன், சிறுமியை நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் அந்த சிறுமிக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இந்த செய்தி அந்த பகுதி மக்களுக்கும் தெரிய வந்தது.இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த சிறுவனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்தனர். அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக