தமிழ்
சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று
காலமானார். அவரது மறைவு குறித்து திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள இரங்கல்
“கலைமாமணி" பிலிம் நியூஸ் ஆனந்தன், கடந்த சில வாரங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்து இன்று காலையில் மறைந்து விட்டார் என்ற
செய்தியினை அறிந்து வருந்துகிறேன். தமிழக திரையுலகில் மக்கள்
தொடர்பாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத் துறை குறித்த பல்வேறு
தகவல்களைச் சேகரித்து வைத்திருந்ததோடு, அந்த விவரங்களைத்
தேவையானவர்களுக்கு வழங்கியும் வந்தார்.ஒவ்வொரு
ஆண்டு தொடக்கத்திலும், அந்த ஆண்டு என்னென்ன திரைப்படங்கள், எந்தெந்த
நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன என்பன போன்ற
விவரங்களையெல்லாம் தொகுத்து சிறு கையேடாகவும் வெளியிட்டு வந்தார்.
தமிழ்த் திரைப் படங்களின் ஆவணக் காப்பகம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்பது அவருடைய விருப்பமாக இருந்து கழக ஆட்சிக் காலத்தில் கவிஞர் இளையபாரதி தலைமையில் ஆவணக் காப்பகம் ஒன்றும் அரசின் உதவியோடு தொடங்கப்பட்டது. இவருடைய மகன் டைமன் பாபுவும் தந்தை வழியில் திரையிலகில் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தி னருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக