வெள்ளி, 25 மார்ச், 2016

வைகோ சொல்கிறார்: திமுக 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும்....பாஜக எவ்வளவாம்? அதிமுக எவ்வளவாம்? வைகோ எல்லாவற்றையும் சொல்லவேண்டும்?

விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவை தங்கள் அணிக்கு இழுக்க தி.மு.க. 500 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது குறித்து கலைஞர் கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவும் முன்பு இடம்பெற்றிருந்தது என்பதை தனது நோட்டீஸில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தே.மு.தி.கவிற்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தர முன்வந்ததாக கூறினார்.   திமுகவோடு விஜயகாந்த் சேராமல் இருப்பதற்காக அம்மாவிடம் எவ்வளவு  சூட்கேஸ்? .... புரோக்கர் எந்த பார்பன பரிவாரம்?  உலகத்திலே பயங்கரமான ஆயுதம்   நிலை கெட்டுப் போன வைகோ போன்றவர்களின் நாக்குதான். பேரம் பேசப்பட்டது என்றால் இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா? விஜயகாந்த் எல்லாருடனும் ஏரியா பேரம் பேசி உள்ளார்.தற்போதும் அதுதான் நடந்திருக்கிறது   

கருணாநிதி ஒரு துண்டுச் சீட்டில் இதனை எழுதிக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வைகோவுக்கு அனுப்பியிருக்கும் நோட்டீஸில், தி.மு.க. தலைவரின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவே இப்படி ஒரு கருத்தை அவர் கூறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது தி.மு.க. தர முன்வந்த 500 கோடி ரூபாயை விஜயகாந்த் நிராகரித்திருப்பதாக வைகோ தன் பேட்டியில் குறிப்பிட்டார். ஏழு நாட்களுக்கு வைகோ தனது கருத்தைத் திரும்பப் பெற்று மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வைகோவின் கருத்து குறித்து தே.மு.தி.கவின் மகளிரணித் தலைவரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரமலதாவிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, தி.மு.க. தரப்பிலிருந்து அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்டதாகவும் யாரும் பேசவில்லையென்றும் தெரிவித்தார்.
வைகோ கூறிய கருத்துக் குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டுமெனவும் பிரமலதா கூறினார்.   bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக