முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை பிரேமலதாவிடம் அவமானப்பட வைத்த இடதுசாரிகள்!!
சென்னை: தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்த் அணி என
கூப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை- குறைந்து போய்விடாது என்று முதுபெரும்
இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவுக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா காட்டமான
பதிலைக் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நல்லகண்ணுவை அறிவிக்கலாம் என
ஒருதரப்பு கூறிக் கொண்டிருக்கும் போதே விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக
ஏற்றுக் கொண்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது அந்த அணி. அத்துடன்
தேமுதிக+ மக்கள் நல கூட்டணி இனி "கேப்டன் விஜயகாந்த் அணி" என
அறிவிக்கப்படும் என்று வைகோ அறிவித்தார்
. Premalatha slams Nallakannu வைகோவின் இந்த அறிவிப்புக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு, அப்படியெல்லாம் ("கேப்டன் விஜயகாந்த் அணி") நாங்க யாரும் சொல்லலை; அவங்களும் சொல்லலை" என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் விஜயகாந்த் அணி என்று சொன்னால்தான் தெரியும். விஜயகாந்த் அணி என்று சொல்வதால் குறைந்து போய்விடாது; யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று காட்டமாக கூறினார். நாட்டின் விடுதலைக்காக போராடி சிறைவாசம் அனுபவித்த பெரியவர் நல்லகண்ணுவை பிரேமலதா போன்ற நேற்று முளைத்த "தலைவர்களிடம்" அவமானப்பட வைத்துவிட்டனரே இடதுசாரிகள்!
Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக