ஞாயிறு, 6 மார்ச், 2016

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காணமல் பலவும் போய்விட்டன

வேளாண்மைக்கு நிதி எங்கே?வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை திட்டங்களுக்கான, தரமான இடு பொருட்கள் உரிய தருணத்தில், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு நோக்க அமைப்பு, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும்.
இதற்காக, ஒரு கோடி ரூபாய் சம பங்கு தொகையும், வட்டியில்லா சுழல் நிதியாக, 100 கோடி ரூபாயும், அதற்கான கட்டமைப்பு
வசதிகளை வலுப்படுத்த, 11.49 கோடி ரூபாய் என மொத்தம், 112.49 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்படும் என, 110 விதியின் கீழ், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், திட்டம் செயல் படுத்தப்படவில்லை.  இதய தெய்வத்தின் திருவிழாவில் காணமல் குழந்தைகள் எண்ணிக்கை 110


கம்ப்யூட்டர் திட்டம் அம்பேல்!
உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பொது விநியோக திட்டத்தின் கீழ், 33,519 ரேஷன் கடைகள் மூலம், அரிசி விலை எதுவுமின்றி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை, மானிய விலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை கண்காணிக்க, கம்ப்யூட்டர் மயமாக்கல் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, 50 கோடி ரூபாய் மதிப்பில், கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதை செயல்படுத்த, மாநில அளவில், தலைமைச் செயலர் தலைமையில் ஒரு குழுவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் தலைமையில், திட்ட செயலாக்கத்திற்காக, மற்றொரு குழுவும் அமைக்கப்படும், என, 110 விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, 2013 மே 6ம் தேதி, சட்டசபையில் அறிவித்தார். ஆனால், திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக