வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ரோஹித் வேமுலாவின் தாய் :ஸ்மிருதி இராணி அப்பட்டமான பொய் சொல்கிறார்..இவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்


பாராளுமன்றத்தில் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியது அப்பட்டமான பொய் என, ரோகித் வெமுலாவின் தாயார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது மற்றொரு மகன் ராஜாவுடன் கலந்து கொண்ட ரோகித் வெமுலாவின் தயார் ராதிகா வெமுலா  கூறியதாவது: “எனது மகன் சாவு பற்றி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பாராளுமன்றத்தில் அபாண்டமாக பொய் சொல்கிறார். அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மந்திரிகளுக்கும், துணைவேந்தருக்கும், மற்றவர்களுக்கும் ஆயுள்தண்டனையைவிட அதிக தண்டனை வழங்கவேண்டும். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்கவேண்டும்“ என்று குறிப்பிட்டார். அவருடைய மகன் ராஜா, ‘சம்பவ இடத்துக்கு நாங்கள் சென்ற நேரத்தில் எனது சகோதரரின் உடல் அருகே போலீசாரும், டாக்டர்களும் இருந்தனர்‘ என்று குறிப்பிட்டார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக