வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பிரேமலதா தேமுதிக முதல்வர் வேட்பாளராகிறார்? தாய்குலத்தின் வாக்குகளை ஜெயாவிடம் இருந்து பிரிகவாம்...

தேமுதிக-வின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் பிரேமலதா அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.;தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்துக்கட்சிகளும் அதற்கான வேலையில் மும்முரமாக ஈட்டுபட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணி அமைப்பது மறுபக்கம் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆலோசிப்பது என அரசியல் கட்சிகள் களை கட்டியுள்ளன.அதிமுக சார்பில் ஏராளமானோர் ஏற்கனவே விருப்பனு மனுவை கொடுத்துவிட்டார்கள். தற்போது திமுக, காங்கிரஸ், >தேமுதிக
ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியில் வேட்பாளராக போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில், தேமுதிக சார்பில் விஜயகாந்திற்கு பதிலாக, அவரது மனைவி பிரேமலதாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலை சந்திக்கலாமா என்று ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்  யாரு கண்டா விஜயபிரபகரன்தான்  துணை முதல்வரோ?
வெளியாகியுள்ளது.இதுபற்றி தேமுதிக மாநில நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்த போது “பிரேமலதாவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது. அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக சம்மதித்து விட்டது. தற்போது கட்சி முழுமையாக பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.அதிமுகவில் ஜெயலலிதா முதல்வர் வேட்பாளராக இருப்பது மாதிரி, தேமுதிக சார்பிலும் ஒரு பெண் முதல்வர் வேட்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக