புதன், 13 ஜனவரி, 2016

Pizza பெட்டிகளில் ரசாயனம் பெண்களுக்கு ஆண்தன்மை...does pizza increase testosterone?

லண்டன்: பீட்சா வைக்கப்படும் அட்டைப்பெட்டிகள், ஈரமாகாமல் இருப்பதற்காக பீட்சாவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், புற்றுநோய் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இந்த வேதிப்பொருட்கள், மனிதர்களின் பாலினத்தை மாற்றும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பீட்சா அட்டைபெட்டிகள் பல, அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்காட்லாந்து டாக்டர் கூறுகையில், பீட்சா அட்டைப்பெட்டியில் பயன்படுத்தப்படும் பெர்புளூரோல்க்கில்ஸ் என்ற வேதிப்பொருள், பெண் நத்தைகளின் பாலினத்தை மாற்றக்கூடியது. இந்த அபாயம் மனிதர்களிடமும் ஏற்படும் அச்சம் உள்ளது. பாலினமாக மாற்றும் என்சைம்களை அதிகளவில் சுரக்க இது காரணமாக உள்ளதாக கூறினார்.
மேலும் அவர், இந்த வேதிப்பொருள் காரணமாக நத்தைகளில் உள்ள டெஸ்டோஸ்டெரோன் என்ற ரசாயனம், பெண் நத்தைகளின் பாலினத்திற்கு காரணமாக உள்ளது எனவும், இதனால், பெண் நத்தைகளுக்கு ஆண் நத்தைகளின் உறுப்புகள் வளர்கிறது எனவும் கூறினார்.
வேதியியல் ஆராய்ச்சியாளர் கூறுகையில்,
பீட்சா வைக்கப்படும் அட்டைப்பெட்டிகளில் இருந்து வேதிப்பொருள் எப்படி நீக்கப்படுகிறது என்ற கேள்வி உள்ளது. அட்டைப்பெட்டியில் இருந்து பீட்சாவுக்கும் நுகர்வோருக்கும் ரசாயனம் செல்கிறது என்ற கேள்வி உள்ளது. அதிகளவில் உட்கொள்ளும்போது, அவர்களின் உடல்களில் ரசாயனம் தங்கிவிடும் அபாயம் உள்ளது. என கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக