புதன், 13 ஜனவரி, 2016

திமிங்கிலங்கள் மரணம்.....மிகப்பெரிய ஆபத்துக்கு அறிகுறியா? கதிர் இயக்கமா? கடலில் நஞ்சா? என்னதான் நடந்தது?

கரையொதுங்கிய திமிங்கிலங்கள். | படம்: என்.ராஜேஷ்.
கரையொதுங்கிய திமிங்கிலங்கள். | படம்: என்.ராஜேஷ். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் சுமார் 20-25 இறந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கின.< பாறைகள் நிரம்பிய இந்தக் கடல்பகுதியில் மோதி திமிங்கிலங்கள் காயமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. திங்கள் மாலை கல்லாமொழி கடற்கரையில் 52 திமிங்கிலங்கள் தென்பட்டன, ஆனால் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் அவை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்கிழமை காலையில் மீண்டும் திமிங்கிலங்கள் தென்பட்டன. சுமார் 20 முதல் 25 திமிங்கிலங்கள் இறந்து கரையொதுங்கின. இவை ஒவ்வொன்றும் 1 முதல் 3 டன்கள் வரை எடை கொண்டிருந்ததாகவும் சுமார் 5 மீ நீளம் கொண்டிருந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.


1973-ம் ஆண்டில் கல்லாமொழி கடற்கரையில் சுமார் 125 திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின. மூக்கில் கடும் காயங்களுடன் காணப்பட்ட இந்தத் திமிங்கிலங்கள் பசுபிக் கடலிலிருந்து வந்தவை என்று கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் திமிங்கிலங்களுக்கு மூக்கு கூர்மையாக இருக்கும் என்று உள்ளூர் மீனவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

அறிவியல் தகவல்களை சுட்டிக் காட்டி ஆட்சியர் ரவிக்குமார் மேலும் கூறும்போது, பொதுவாக திமிங்கிலங்கள் வழிகாட்டியான ஒரு பைலட் திமிங்கிலத்தை பின்பற்றி பயணம் மேற்கொள்ளும், இந்த பைலட் திமிங்கிலம் வழிதவறினால் மற்ற திமிங்கிலங்களும் வழி தவறிவிட வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் பருவநிலை மாற்றம், கடலடி நீர் வேகம், அலைகளின் வேகம் ஆகியவையும் திமிங்கிலங்களின் வழியைத் தீர்மானிப்பவைகளாக இருக்கின்றன.

ஆனால், ஏன் வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி திமிங்கிலங்கள் இறந்து கரையொதுங்குகின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக