வியாழன், 21 ஜனவரி, 2016

காவலாளியை Hummer கார் ஏற்றி கொன்ற கிங் பீடி கம்பனி அப்துல் காதருக்கு ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம்: வீட்டு காம்பவுண்ட் கதவை
தாமதமாக திறந்ததால்,
காவலாளி மீது, காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், பிரபல பீடி நிறுவன அதிபர் முகமது நிஷாமை, 'குற்றவாளி' என, கேரள கோர்ட், உறுதி
செய்துள்ளது; இவருக்கான தண்டனை விவரம், இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு 24 வருட சிறை தண்டனை மற்றும் 80.3 லட்சம் ரூபாய் அபராதம் விதி்ககப்பட்டுள்ளது. தமிழகத்தில் தயாராகும், 'கிங்' பீடி நிறுவன இயக்குனராக உள்ளவர் நிஷாம். புகையிலை ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்; இவருக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், 5,000 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இவரது வீடு, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது;
இங்கு சந்திரபோஸ் என்பவர், காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்தாண்டு, வீட்டின் கதவைத் திறக்க, சந்திர போஸ் தாமதம் செய்ததால், ஆத்திரமடைந்த நிஷாம், அவர் மீது காரை மோதினார். காயமடைந்த சந்திரபோஸ், தப்பி ஓட முயன்றார். அவரை காரில்துரத்திச் சென்று, சுவரோடு மோதினார் நிஷாம்.  கதவை திறக்க தாமதம் என்பதால் ஹம்மர் காரை மோதி துரத்தி துரத்தி ரசித்திருக்கிறான்..மயங்கி விழுந்த காவலாளியின் தலையில் காலால் உதைத்து நாய் இன்னும் மரிக்கல்லையா என்றும் கேட்டுள்ளான்...இவனுக்கு ஏன் தூக்கு தண்டனை கிடைக்கல? பணம் ... 
பலத்த காயமடைந்த சந்திரபோஸ், ஒரு மாதத்துக்குப் பின், மருத்துவமனையில் உயிரிழந்தார்; இந்த சம்பவம், கேரளா வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீர்ப்புஇந்த வழக்கின் விசாரணை, திருச்சூர் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், 'சந்திரபோஸ் கொலையில், நிஷாம் குற்றவாளி' என, அறிவிக்கப்பட்டது. நிஷாமுக்கான தண்டனை, இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அவருக்கு 24 வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 80.3 லட்சம் ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையில் சுமார் 50 லட்சம் வரையி்ல சந்திரபோஸ் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நிஷாமின் மனைவிக்கும் கோர்ட் தண்டனை விதித்துள்ளது.

அடுக்கடுக்கான வழக்கு...
* முகமது நிஷாமிடம், ஏராளமான வெளிநாட்டு கார்கள் உள்ளன. காவலாளியை கொலை செய்ய பயன்படுத்தியது, 'ஹேம்மர்' என்ற சொகுசு கார்
* தன், மைனர் மகனை காரை ஓட்டச் செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்; இது தொடர்பாக, முகமது நிஷாம் மீது வழக்கு தொடரப்பட்டது
* குடிபோதையில் காரை ஓட்டியதற்காக, கேரளாவைச் சேர்ந்தபெண் எஸ்.ஐ., முகமது நிஷாம் மீது, வழக்கு பதிவு செய்தார். ஆத்திரம் அடைந்த நிஷாம், அந்த பெண் எஸ்.ஐ.,யை, அறையில் அடைத்து வைத்ததாகவும் வழக்கு உள்ளது.
* முகமது நிஷாம் மீது, 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தன் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்குகளில் இருந்து தப்பி வந்தார்.
* காவலாளியை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில், நிஷாமை தப்பிக்க வைக்க முயன்றதாக, திருச்சூர் போலீஸ் கமிஷனர் ஜேக்கப், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
* அடக்கரபரம்பில் அப்துல் காதர் என்ற பிரபலமான பீடி நிறுவன அதிபரின், இரண்டாவது மகன் நிஷாம்.
* நிஷாம், கிங் பீடி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி வகிக்கிறார்  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக