வியாழன், 21 ஜனவரி, 2016

அம்மா call center...டாஸ்மாக் ரிசீதா..விளையாடறீங்களா...

தமிழக அரசு புதிதாக துவங்கி உள்ள, அம்மா அழைப்பு மையத்தை, நேற்று தொடர்பு கொள்ள முயன்ற பெரும்பாலான மக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தமிழக மக்கள், தங்கள் அனைத்து குறைகளையும் தெரிவிக்க, மாநில அரசு சார்பில், 24 மணி நேர, கட்டணமில்லா தொலைபேசி சேவை, '1100', நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. முதல் நாளன்று, 2,000 புகார்கள் பெறப்பட்டன.
ஆனால், இரண்டாம் நாளான நேற்று, பொதுமக்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, தொடர்ந்து, 'பிசி, பிசி' என வந்ததால், புகார் தெரிவிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதிருப்தியடைந்த பலர், இச்சேவையில் உள்ள குளறுபடிகளை பற்றி, 'பேஸ்புக்' சமூக வலைதளத்திலும், தங்கள்கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறியதாவது:
இந்த திட்டத்தில், ஒரே நேரத்தில், 138 ஊழியர் மட்டுமே அழைப்புகளை ஏற்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு நாளைக்கு, 15 ஆயிரம் அழைப்புகளை மட்டுமே ஏற்க முடியும். இது, நாளடைவில் சீரடையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-- நமது நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக