ஞாயிறு, 17 ஜனவரி, 2016

காபி வித் DD இளையராஜா: நான் கஷ்டப்பட்ட காலத்தில் கம்யுனிஸ்ட்கள் உதவவில்லை.

தொலைக்காட்சியில் “காபி வித் டிடி” நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, அந்த பேட்டியில் “வறுமையான காலத்தில் கம்யூனிஸ்ட்கள் தனக்கு உதவி செய்யவில்லை” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து , கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வதுடன், இளையராஜாவுக்கு கடுமையான கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.
பேட்டியில் பேசிய இளையராஜா தான் கஷ்டப்பட்ட நாட்களில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வாடகைக்கு தங்க இடம் கேட்டதாகவும் அதற்கு மூத்த கம்யூனிஸ்ட் இயக்க தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான ஐ.மாயாண்டி பாரதி இடம் தர மறுத்ததாகவும் கூறினார் . கூடவே மேடைகளில தொழிலாளர் தோழர்களே என்று பேசும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் தனி மனிதனுக்கு இடம் தர மறுத்ததாக குற்றம் சாட்டினார்.
இந்த பேட்டியை பார்த்த ஐ.மா.பாவுடன் நெருங்கி பழகியவர்கள்அதிர்ந்து போயினர். இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் கஷ்டப்பட்ட காலத்தில் ஒரு குழுவாக செயல்படச் சொல்லி அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இயக்க மேடைகளில் வாய்ப்பு வாங்கி தந்தவர் ஐ.மா.பா.
மதுரை மண்டையன் ஆசாரி தெருவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள அறையை வாடகைக்கு விட வேண்டும் என்ற கட்சி முடிவை மீற முடியாது என்று ஐ.மா.பா கூறியதில் என்ன தவறு ?
அது சரி இளையராஜா உங்களுக்கு சென்னைக்கு போக காசு கொடுத்த ஐ.மா.பாவை எப்படி மறந்தீர்கள் ? கட்சி மேடைகள் வேண்டாம் உங்கள் திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு தேடுங்கள் என்று சொன்ன ஐ.மா.பாவையா இப்போது சாடுகிறீர்கள?
100 வயதிலும் எழுதி முடிக்காத ஒரு புத்தகத்தை எழுதி முடிப்பதே என் இலக்கு என்று கர்ஜித்த அந்த சிங்கமா உங்கள் வாய்ப்பை பறித்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை உலகுக்கு அறிமுகம் செய்த ஐ.மா.பா உங்களை கஷ்டத்தில் ஆழ்த்தினாரா ?
ஐயா இளையராசா ? இன்று நீங்கள் சொன்னதை மறுக்க ஐ.மா.பா உயிரோடு இல்லை ஆனால் ஒன்றை மறவாதீர், ஐ.மா.பா ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் மனதில் பெருஞ்சோதியாய் இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறார்…இசைஞானி இசைஞானியாகவே எஞ்சிய காலமும் இருந்து விட்டு போங்கள்…இல்லையேல் உங்கள் தம்பியை போல் வெளிப்படையாக காவி கும்பலோடு ஐக்கியமாகிவிடுங்கள். ..உங்களுக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தை உண்மையான தியாகத்தை கொச்சைப்படுத்த பயன்படுத்தாதீர்கள்…://thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக