ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ராதாராஜன் : வீட்டுக்குள்ளேயே தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கிறேன் .......

“அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!
ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்று.ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் சொல்கிறார். “அப்படியே தடை வந்துட்டாலும் கூட எங்கிட்டே இருபது ஏக்கர் இடம் இருக்கு. முன்னூறு காளைகள் இருக்கு. நான் நடத்திட்டுப் போறேன். யாரென்ன பண்ணுவாங்கன்னு பார்த்துக்கறேன்”அவருக்கு பதிலடியாக ராதா ராஜன் என்கிற விலங்குகள்நல ஆர்வலர் சொல்கிறார். “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன். என்னை வந்து நீங்க கேட்கக்கூடாது”நெறியாளர் குணசேகரன் அப்படியே திகைத்துப் போகிறார். சீமானுக்கு என்ன பதிலடி கொடுப்பது என்றே தெரியவில்லை. அந்த விவாத மேடையில் இருந்த யாரும் இந்த பார்ப்பனக் கொழுப்பு வாதத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருந்தது.

திமுகவின் மனுஷ்யபுத்திரனோ, தமிழன் பிரசன்னாவோ.. அதிமுகவின் சமரசமோ, மா.கம்யூவின் அருணனோ அல்லது கட்சிசாரா இளங்கோ கல்லாணையோ, எவிடென்ஸ் கதிரோ அந்த விவாதத்தில் இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா? இங்கு மட்டுமல்ல. அம்பேத்கரிய, பெரியாரியவாதிகள் இடம்பெறாத இந்தியாவின் எந்த மேடைகளிலும் தமிழ்தேசியம், திராவிடம், மார்க்ஸியம், சமூகநீதி மாதிரி முன்னேற்ற சிந்தனைகளோடு மனிதமும் பார்ப்பனத் தினவெடுத்த சீண்டல்களில் தோற்கும் என்பதே யதார்த்தம். அரசியல் கற்காமலேயே அரசியலில் எல்லாம் தெரியும் என்று 2009க்கு பிறகு வாய் மட்டுமே கிழிய பேசும் காளான்கள் இதை முதலில் உணரவேண்டும்...யுவகிருஷ்ணா, பத்திரிகையாளர்.  //thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக